twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7.30 க்கு துவங்கப்படும் புதிய டிவி சீரியல்கள்...காரணம் என்னன்னு தெரியுமா?

    |

    சென்னை : டிவி.,க்களில் புதுசாக எத்தனை நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டாலும் ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது என்னவோ சீரியல்கள் தான். அதிலும் மெகா சீரியல்களுக்கு இருக்கும் வரவேற்பு குறையாமல் இருந்து வருகிறது.

    Recommended Video

    Pandian Stores Stalin குடும்ப புகைப்படம் | Moorthy, Stalin Biography

    சொந்தமாக படம் தயாரித்து சூன்யம் வைத்துக்கொண்ட மூன்றெழுத்து நடிகர்.. கடன் பிரச்சனையில் தவிக்கிறாராம்!சொந்தமாக படம் தயாரித்து சூன்யம் வைத்துக்கொண்ட மூன்றெழுத்து நடிகர்.. கடன் பிரச்சனையில் தவிக்கிறாராம்!

    கொரோனா லாக்டவுனில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு அம்சம் டிவி மட்டும் தான். தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓடிடி.,யில் சினிமாக்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. இவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக டிவி சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவில் சினிமாக்களை ஒளிபரப்ப துவங்கி விட்டன.

    டிவி ரிலீசாகும் படங்கள்

    டிவி ரிலீசாகும் படங்கள்

    அதில் பல சிறிய பட்ஜெட் படங்கள் வேறு வழியில்லாமல் நேரடியாக டிவி.,க்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருவதால், இவற்றை வாங்க டிவி சேனல்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றன. எத்தனை படங்கள் ஒளிபரப்பினாலும், ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் சீரியல்களை முந்த முடியவில்லை.

    இடைவிடாத சீரியல்கள்

    இடைவிடாத சீரியல்கள்

    பெரும்பாலான டிவி சேனல்களில் காலை துவங்கி, நள்ளிரவு தூங்க போகும் வரை இடைவிடாது சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. பல சீரியல்கள் மெகா சீரியல்களாக போய் கொண்டிருக்கும் நிலையில் புதிய சீரியல்களும் ஆரம்பிப்பதும் குறையவில்லை. அப்படி புதிதாக துவங்கப்படும் சீரியல்கள் பிரைம் டைமை குறிவைத்தே துவங்கப்படுகின்றன.

    7.30 ஐ குறிவைக்கும் சேனல்கள்

    7.30 ஐ குறிவைக்கும் சேனல்கள்

    அதிலும் குறிப்பாக இரவு 7.30 மணிக்கு தான் துவங்கப்படுகின்றன. ஓரளவு டிஆர்பி.,யில் முன்னேற்றம் வந்த பிறகே இந்த சீரியல்களின் நேரம் மாற்றப்படுகிறது. அனைத்து டிவி சேனல்களும் சொல்லி வைத்தாற் போல் இந்த 7.30 சென்டிமென்ட்டை பின்பற்றுகின்றன. பொதுவாக பேசும் போது பிரச்சனைகளை தான் 7.30 என்று சொல்வார்கள். ஆனால் இதனை சென்ட்டிமென்டாக பின்பற்றி வருகின்றன டிவி சேனல்கள்.

    7.30 சென்டிமென்ட் ஏன்

    7.30 சென்டிமென்ட் ஏன்

    இந்த சென்ட்டிமென்டிற்கு முக்கிய காரணம், பெண்களை குறிப்பாக குடும்ப தலைவிகளை கவருவது தான். வேலைக்கு செல்லும் பெண்கள் ஆனாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்கள் ஆனாலும் சரி சிறிது ஓய்வில் இருக்கும் நேரம் 7.30 தான். இரவு உணவிற்கு முந்தைய நேரமான 7.30 க்கு சீரியல்களை துவங்கினால், பெண்களையும் வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் கவர முடியும் என்பதே டிவி சேனல்களின் கணிப்பு.

    அதிகரிக்கும் மெகா சங்கமம்

    அதிகரிக்கும் மெகா சங்கமம்

    இந்த நேரத்தில் துவங்கப்படும் சீரியல்களை பார்த்து பழகி விட்டார்கள் என்றால், பிறகு அந்த சீரியலை வேறு நேரத்திற்கும் மாற்றினாலும் மக்கள் பார்ப்பார்கள் என்பது தான். அதிலும் சில சீரியல்களின் டிஆர்பி டல் அடிக்கும் சமயத்தில் அதற்கு முன்னால் அல்லது பின்னால் ஒளிபரப்பாகும் சீரியலுடன் இணைத்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேர எபிசோடாக வழங்குகிறார்.

    English summary
    Tv channels begin their new mega serials at 7.30 pm. channels believed that this prime time will increase the viewers count.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X