விஜய்யின் பீஸ்ட் ப்ரோமோ வீடியோவில் அஜித்...எத்தனை பேர் கவனித்தீர்கள் ?

சென்னை : நேற்று வெளியிடப்பட்ட விஜய்யின் பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோவில் அஜித் இருந்ததை கவனித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது அஜித்தை பார்ப்பதற்காகவே இந்த வீடியோவை அதிகமானவர்கள் பார்த்து வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தின் அப்டேட் நேற்று மாலை வெளியிட உள்ளதாக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை நேற்று காலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிள் பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக, மாஸான ப்ரோமோ வீடியோ ஒன்றுடன் அறிவித்தனர்.

டிரெண்டிங்கில் போட்டி

டிரெண்டிங்கில் போட்டி

இந்த ப்ரோமோ வீடியோ வெளியானதுமே #BeastFirstSingle, #ThalapathyVijay போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டன. விஜய் ரசிகர்கள் இதை டிரண்ட் ஆக்கி இருக்கிறார்கள் என்றால், சிறிது நேரத்திலேயே #Valimai, #AjithKumar போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆக்கப்பட்டன. இதை பார்த்த அனைவரும் குழம்பி போயினர். எதற்காக அஜித் பெயர் டிரெண்டிங்கில் வருகிறது. அப்படி என்ன நடந்தது என கேட்க துவங்கி விட்டனர்.

போட்டி போட்ட ரசிகர்கள்

போட்டி போட்ட ரசிகர்கள்

வழக்கமாக அஜித் படம் பற்றிய அறிவிப்புகள், அப்டேட்கள் வரும் போது விஜய் ரசிகர்களும், விஜய் படத்தின் அறிவிப்புகள் வரும் போது அஜித் ரசிகர்களும் ட்விட்டரில் மோதிக் கொள்வது தான். அப்படி ஏதோ நடக்கிறது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் விசாரித்த போது, காரணம் அது இல்லையாம். மோதலுக்காக இல்லாமல், உண்மையில் அஜித்தை கொண்டாட தான் இவற்றை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

பீஸ்ட் ப்ரோமோவில் அஜித்தா

பீஸ்ட் ப்ரோமோவில் அஜித்தா

விஜய்யின் பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளில் அனிருத், நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் இருந்தனர். அனிருத்தின் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் அஜித்தின் விவேகம் படத்திற்காக அனிருத் வாங்கிய விருது ஒன்று இருந்தது. இதில் அஜித் ஸ்டில் இருந்ததை பார்த்து விட்டு தான், விஜய்யின் பீஸ்ட் ப்ரோமோவில் அஜித் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

யாரு பாத்த வேலடா இது

யாரு பாத்த வேலடா இது

பீஸ்ட் ப்ரோமோ வீடியோவில் அஜித் இருக்கிறார் என்றதுமே, அவர் எங்கு இருக்கிறார் என்பதை பார்க்கவே இந்த வீடியோவை தற்போது அதிகமானவர்கள் மிக உன்னிப்பாக திரும்ப, திரும்ப பார்த்து வருகின்றனர். இதனால் நிஜமாகவே இந்த தகவல் அஜித் ரசிகர்கள் கிளப்பி விட்டதா அல்லது இந்த வீடியோவை அதிகமானவர்களை பார்க்க வைப்பதற்காக விஜய் ரசிகர்களே இப்படி கிளப்பி விட்டிருக்கிறார்களா என அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X