பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நீங்க கவனிச்சீங்களா ?
சென்னை : பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் விஜய் டிவி.,யில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நேற்று பிரம்மாண்ட விழாவுடன் துவங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
Recommended Video
போட்டியாளர்களை அறிமுகம் செய்து, நிகழ்ச்சியை துவக்குவதற்கு முன் பிக்பாஸ் வீட்டை வழக்கம் போல் சுற்றி காட்டினார் கமல். இந்த முறை பிக்பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை கமலே கூறினார். அப்படி கமல் கூறாத, நீங்கள் கவனிக்காத பிக்பாஸ் வீட்டின் சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தான் இங்கே பார்க்க போகிறோம்.

திரும்பிய பக்கமெல்லாம் கண்ணாடி
வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் சைஸ் வாரியாக கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் கூட கண்ணாடியால் ஆன டிசைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெயின் டோர் முழுவதும் கண்ணாடி துண்டு டிசைன்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வீட்டிற்கு புதிய பிரம்மாண்டத்தை கொடுக்கிறது.

எங்கு பார்த்தாலும் 5
நுழைவு வாயில் துவங்கி கிச்சன், படுக்கை அறை, டைனிங் டேபிள் சேர் என திரும்பிய பக்கமெல்லாம் 5 என்ற எண் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் முகப்பில் பிரம்மாண்ட 5 வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்பாகம் தரையை தொட்டுக் கொண்டும், மேல் பாகம் வீட்டின் கூரையை தொட்டுக் கொண்டும் உள்ளது.

மர வேலைப்பாடு
வீட்டின் என்ட்ரன்ஸ் கதவு அருகிலேயே பிரம்மாண்டமாக மரம் போன்ற பச்சை நிற வடிவம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மரம் போன்று இல்லாமல், பிரம்மாண்ட கொடி ஒன்று படர்வதை போல் இதன் தோற்றம் அமைந்துள்ளது. வீட்டின் உட்புறத்தில் மர வேலைப்பாடுகளால் ஆன உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவப்பு நிற பூ அமைப்பு
வீட்டின் பல இடங்களில் நியான் லைட் போன்று சிவப்பு நிறத்தில் ஆன பூ போன்ற வடிவத்தை காண முடிகிறது. இது பஞ்சபூதங்களை குறிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாம். இதைக் குறிப்பிடும் வகையில் தான் இந்த வீடு பஞ்ச பூதங்களால் அமைக்கப்பட்டுள்ளது என பிக்பாஸ், போட்டியாளர்களிடம் பேசும் போது கூறி உள்ளார்.

லிவ்விங் ஏரியா
லிவ்விங் ஏரியாவில் அனைத்து போட்டியாளர்களும் வசதியாக அமரும் வகையில் பெரிய சோஃபா போடப்பட்டுள்ளது. இதே போல் போட்டியாளர்கள் பல இடங்களில் அமர்ந்து அரட்டை அடிப்பதற்கு வசதியாக சிறிய சோஃபாக்கள், சேர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

முகலாய ஓவியங்கள்
வீட்டின் பல இடங்களில், பல சைஸ்களில் முகலாய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கன்ஃபெஷன் ரூம் கதவில் கூட முகலாயர்கள் காலத்து ஓவியங்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சீசனில் ஜல்லிக்கட்டு மற்றும் தமிழர் பாரம்பரிய கலைகளை அறிவுறுத்திய அம்சங்கள் இடம்பெற்றதை போல் இந்த முறை முகலாய ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கன்ஃபெஷன் ரூம்
இதற்கு முன் இருந்தது போல் இருட்டு அறையில் பயமுறுத்தும் வகையில் இல்லாமல் போட்டியாளர்கள் வசதியாக அமரும் வகையில் பெரிய சோஃபாவுடன், வெளிச்சமான பளீச்சென்ற தோற்றத்தில் கன்ஃபெஷன் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. சோஃபாவின் பின்புறம் சிறகுகள் விரிந்திருப்பதை போன்ற அமைப்பும், உட்புற கதவில் பறக்கும் சிறகுகளுடன் கூடிய குதிரை போன்ற ஓவியமும் வரையப்பட்டுள்ளது.

டைனிங் ரூம்
டைனிங் ரூமில் அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வகையில் பெரிய வட்ட வடிவ டேபிள் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய பூ டிசைன்கள் வரைந்த சேர்களும், 5 என குறிப்பிடப்பட்ட சேர்களும் அமைக்கப்பட்டுள்ளது.

குக்கிங் ஏரியா
சமையல் செய்யும் இடத்தில் ப்ரீத்தி மிக்சி மற்றும் ப்ரீத்தி அடுப்பு, பெரிய சமையல் மேடை, அதற்கு கீழ் மளிகை பொருட்கள் வைப்பதற்காக பாரம்பரிய வடிவில் அலமாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. சமையல் அறையிலும் மூன்று பெரிய கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன.

பெட் ரூம்
பெட் ரூம் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டிருந்தாலும் இரு அறைகளுக்கும் இடையே கண்ணாடி போன்ற எந்த தடுப்பும் வைக்கப்படவில்லை. பெட் ரூமின் மேற்பகுதியில் இயற்கையான சூரிய வெளிச்சம் அறைக்குள் வரும் வகையில் கண்ணாடி போன்ற அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் லைட் போட்டுக் கொண்டிருக்காமல் பிரகாசமானதாக அறை இருக்கும்.

மாற்றப்பட்ட சிறை
முந்தைய சீசன்களில் வசதியாக மெத்தையுடன் சிறை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த முறை நீச்சல் குளம், பாதாள சிறையாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறை வெறுமனே மூடப்பட்டிருந்த நீச்சல்குளம், இந்த முறை சிறை போன்ற அமைப்பிலேயே மெல்லிய வெளிச்சத்துடன், இருட்டு அறை போல் அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











