twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “எஸ்பிபி சாரிடம் அந்த பிடிவாதத்தை எதிர்பார்க்கவில்லை: பாடகி சித்ராவின் பிறந்தநாள் ப்ளாஷ்பேக்!

    |

    சென்னை: திரையுலகில் பின்னணிப் பாடகி சின்ன குயில் சித்ராவின் சாதனைகள் மிகப் பெரியது.

    சுமார் 43 வருடங்களாக தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் 25,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

    59வது பிறந்தநாள் கொண்டாடும் சின்ன குயில் சித்ராவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

     20 வயசில் கமலுடன் அப்படி ஒரு நெருக்கமான காட்சியில் நடித்த அபிராமி.. விருமாண்டி சுவாரஸ்யம்! 20 வயசில் கமலுடன் அப்படி ஒரு நெருக்கமான காட்சியில் நடித்த அபிராமி.. விருமாண்டி சுவாரஸ்யம்!

    தமிழில் அறிமுகம்

    தமிழில் அறிமுகம்

    1984ல் முதன்முறையாக தமிழில் ஒரு ரம்மியமான குயிலின் குரல் பாடல் வடிவில் ஒலிக்கிறது. இளையராஜாவின் இசையில் பின்னணிப் பாடகியாக தமிழில் அறிமுகமான அவர், முன்னதாக மலையாளத்தில் தனது குரலை ரசிகர்களிடம் பதிவு செய்துவிட்டார். தமிழில் தொடர்ந்து ராஜாவின் இசையில் அருமையான பல மெலடி பாடல்களைப் பாடிய அவர், ரசிகர்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாக குடியேறிவிட்டார் என்றே சொல்லலாம்.

    சூப்பர் ஹிட் பாடல்கள்

    சூப்பர் ஹிட் பாடல்கள்

    சித்ராவின் குரலில் வெளியான பாடல்களை பட்டியலிட்டால், அதில் பெரும்பாலனவை சூப்பர் ஹிட் பாடல்கள் தான். "கல்யாணத் தேனிலா, ஓ ப்ரியா ப்ரியா, நீ ஒரு காதல் சங்கீதம், ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், சொர்க்கத்தின் வாசற்படி, ஒரு ஜீவன் அழைத்தது, அன்பே நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ" என அடுக்கிக் கொண்டே போகலாம்.

    இசைப்புயலுடன் சின்ன குயில்

    இசைப்புயலுடன் சின்ன குயில்

    இளையராஜாவைப் போலவே ரஹ்மானின் இசையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் சித்ரா. 'ஓகே கண்மணி' படத்தில் வரும் 'மலர்கள் கேட்டேன்' பாடலை சித்ரா தான் பாட வேண்டும் என, 3 மாதங்கள் வரை ரஹ்மான் காத்திருந்துள்ளார். அந்தளவிற்கு சித்ராவின் குரலை மிஸ் செய்துவிடக் கூடாது என்பதில் ஏ.ஆர். ரஹ்மான் தீர்க்கமாக இருந்துள்ளார்.

    விருதுகளின் இளவரசி

    விருதுகளின் இளவரசி

    சித்ராவின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் எந்தளவிற்கு அங்கீகாரம் கிடைத்ததோ, அதேயளவில் விருதுகளும் அவரது கைகளில் தஞ்சமடைந்தன. 6 தேசிய விருதுகள், 8 ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை தனது திறமையால் வாகை சூடினார். அதேபோல் எஸ்.பி.பி, மனோ ஆகியோருடன் தான் சித்ரா அதிகமான டூயட் பாடல்களைப் பாடியுள்ளார்.

    எஸ்பிபி - சித்ரா

    எஸ்பிபி - சித்ரா

    எஸ்பிபியுடன் சித்ரா பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும், தேன் சொட்டும் ரகங்கள். இருவருக்கும் இடையேயான சகோதரத்துவம் நிறைந்த உறவும், பலரையும் வியப்பில் ஆழ்த்தும். மேடை நிகழ்ச்சியில் சித்ராவை எஸ்பிபி கலாய்ப்பதும், உடனே சித்ரா சிறுபிள்ளையாக சிரித்து மகிழ்வதும், பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.

    நான் எதிர்பார்க்கவில்லை

    நான் எதிர்பார்க்கவில்லை

    ஒருமுறை எஸ்பிபி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்த சித்ரா, "ஒருமுறை வெளிநாட்டுக்கு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது, இசைக் கலைஞர்களுக்கு ரூம் ரெடியாகவில்லை. ஆனால், அவர்களுக்கு ரூம் ரெடியாகும் வரை எஸ்பிபி ஹோட்டல் ரிசப்ஷனை விட்டு நகரவில்லை. அப்போது நள்ளிரவு 1 மணி இருக்கும்." எனக் கூறியதோடு, எஸ்பிபி சார் இப்படி பிடிவாதம் பிடிப்பார் என நான் நினைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

    வாழ்த்து மழை

    வாழ்த்து மழை

    இந்நிலையில் தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சின்ன குயில் சித்ராவிற்கு, பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களது பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளனர். மேலும், சித்ரா தொடர்ந்து இன்னும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி, தங்களை மகிழ்விக்க வேண்டும் எனவும், விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Playback Singer Chithra Birthday special
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X