Don't Miss!
- News
நெருங்கிய காலக்கெடு.. தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு.. ஆதாரை இணைச்சிட்டீங்களா? ரொம்ப முக்கியம்
- Technology
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நன்றி சொல்ல மறந்து போன பிரதீப் ரங்கநாதன்.. இப்பதான் நியாபகம் வந்துச்சாம்!
சென்னை : நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ம் தேதி வெளியான கோமாளி என்ற படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கினார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் பிரதீப். இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
2K கிட்சின் காதலை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்தப் படம் தற்போது தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.
பாக்ஸ்
ஆபிஸில்
சொல்லி
அடிக்கும்
லவ்
டுடே…
இந்த
வாரம்
ரிலீஸான
படங்களுக்கும்
டஃப்
கொடுத்த
பிரதீப்!

கோமாளி பட இயக்குநர்
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான கோமாளி படத்தை இயக்கி கோலிவுட்டில் கவனம் பெற்ற இயக்குநராக மாறினார் பிரதீப் ரங்கநாதன். 90ஸ் கிட்சின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது லவ் டுடே படத்தை இயக்கி நடித்துள்ளார் பிரதீப்.

ரசிகர்களை கவர்ந்த வெற்றிப்படம்
2K கிட்ஸ்களின் காதலை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாயகியாக இவானா நடித்துள்ளார். மேலும் படத்தில் யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தற்போது 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி நடைபோட்டு வருகிறது.

ஓடிடியிலும் வெளியீடு
படம் கடந்த மாதம் 4ம் தேதி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து வரும் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது. இந்த ரிலீசுக்காக தற்போது முதலே ரசிகர்களை காத்திருக்கின்றனர். இதனிடையே இந்தப் படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அங்கும் ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்துள்ளது.

லவ் டுடே இயக்குநருக்கு நன்றி
கடந்த 1997ம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியாகி சிறப்பான வெற்றியை கொடுத்து விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்த படம் லவ் டுடே. இந்தப் படத்தில் சுவலட்சுமி ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் தலைப்பைதான் தற்போது பிரதீப் தனது படத்திற்காக பயன்படுத்தியுள்ளார். இதனிடையே தற்போது லவ் டுடே இயக்குநர் பாலசேகரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

இயக்குநர் பாலசேகரனுக்கு பாராட்டு
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் லவ் டுடே தலைப்பை சிறப்பான வகையில் உருவாக்கிய பாலசேகரனுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியுள்ளதாகவும் பிரதீப் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தலைப்பிற்கு நன்றி என்று கூறியுள்ள பிரதீப், பெருந்தன்மையுடன் இருந்ததற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.