»   »  'பஞ்ச்' டயலாக்குடன் கலக்கும் கபாலி போஸ்டர்.. இது திருச்சியில் !

'பஞ்ச்' டயலாக்குடன் கலக்கும் கபாலி போஸ்டர்.. இது திருச்சியில் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: "கபாலி" படத்தை வரவேற்க இப்பவே திருச்சி ரசிகர்கள் ரெடியாயிட்டாங்க. பஞ்ச் டயலாக்குகளுடன் மிக நீளமான போஸ்டர்கள் தற்போது திருச்சி மக்களை ஈர்த்து வருகிறது.

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' வருகின்ற 22 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. முதல் நாள் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் படம் வெளியாகும் அனைத்து நாடுகளிலும் சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்து விட்டன.

different kabali poster in trichy

ரஜினி படம் வருதுன்னாலே அவரோட ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் திருவிழா மாதிரிதான். இப்ப கபாலி படுத்தும் பாடு எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். டீசரில் ஆரம்பித்து விற்பனை வரைக்கும் கொடிக்கட்டி பறக்குது. அதேசமயம் விதவிதமான போஸ்டர்களிலும் கபாலியை வரவேற்க துவங்கியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

different kabali poster in trichy

அந்த வகையில் திருச்சி ரசிகர்கள், எல்லா நடிகரோட படத்தையும் டூவிலர்ல ஒட்டி பாத்துருப்ப.. ஆட்டோல ஒட்டி பாத்துருப்ப.. கார்ல ஒட்டி பாத்துருப்ப.. ஏன் பஸ்ல கூட ஒட்டி பார்த்துருப்ப.. பிளைட்ல ஒட்டி பாத்துரிக்கயா.. கபாலி நெருப்புடா என்று "பஞ்ச்" டயலாக்குகளுடன் போஸ்டர்கள் மூலம் கபாலியை வரவேற்று உள்ளனர். இது திருச்சி ரசிகர்களின் வரவேற்பு. இன்னும் படம் ரிலீஸாக ஒரு வாரம் உள்ள நிலையில் இப்பவே ரஜினி ரசிகர்கள் ரெடியாகிவிட்டனர்.

English summary
Trichy fans posters for rajini's kabali

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil