»   »  நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி: டிஜிட்டல் 'பாட்ஷா' வருகிறார்

நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி: டிஜிட்டல் 'பாட்ஷா' வருகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா படத்தை டிஜிட்டலில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சுரேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கிய பாட்ஷா படம் கடந்த 1995ம் ஆண்டு ரிலீஸானது. ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பழைய படங்களை தூசு தட்டி டிஜிட்டலில் வெளியிட்டு வரும் காலம் இது.

Digitalised Baasha to hit screens: Are you ready?

இந்நிலையில் ரஜினியின் பாட்ஷா படத்தையும் டிஜிட்டலில் வெளியட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம். வீரப்பனின் மருமகனும், தயாரிப்பாளருமான டி.ஜி. தியாகராஜன் கூறுகையில்,

பாட்ஷா படத்தை டிஜிட்டல் வடிவில் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டோம். படத்தின் ரிலீஸ் குறித்து எனது மாமனாரிடம் கேட்க வேண்டும் என்றார்.

கபாலி விருந்து முடிந்த கையோடு பாட்ஷா விருந்து காத்திருக்கிறது... ரஜினியின் நடிப்பு, ரகுவரனின் வில்லத்தனம் சான்சே இல்லை. எத்தனை வில்லன்கள் வந்தாலும் ரகுவரனுக்கு ஈடு இல்லை. அவர் அவரே தான்.

நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி.. அவர் சொல்லி பல வருஷம் ஆச்சு ஆனால் இன்னும் அந்த வசனம் இளமையுடன் உள்ளது.

English summary
Talks are on to release the digitized version of Rajinikanth's Baasha, the cult movie that was released in 1995.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil