Don't Miss!
- News
"வரி குறைப்பு வரவேற்க கூடியதுதான்.." பட்ஜெட் குறித்து எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து
- Sports
"இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து".. பாக். சீனியர் எச்சரிக்கை!
- Finance
பட்ஜெட் 2023: உங்க சம்பளத்துக்கு வரிச் சேமிப்பு எவ்வளவு..? புட்டு புட்டு வைக்கும் தகவல்..!
- Lifestyle
தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜித்தா? விஜய்யா? தில் ராஜூ சர்ச்சை பேச்சு..தரமான பதிலடி கொடுத்த திருப்பூர் சுப்ரமணியம்!
சென்னை : வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார்.
வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தானா, சரத்குமார், ஷாம், சங்கீதா, பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
வாரிசு
தயாரிப்பாளர்
தில்
ராஜு
பற்ற
வைத்த
நெருப்பு..
சோஷியல்
மீடியாவே
கொதிக்குது..
யாரு
நம்பர்
1?

துணிவா? வாரிசா?
துணிவு மற்றும் வாரிசு இரண்டு பெரிய இரண்டு நடிகர்களின் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் இரு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு படமும் பொங்களுக்கு வெளியாக உள்ளதால், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் யார் படம் பெஸ்ட் என இணையத்தில் தாறுமாறாக சண்டை போட்டு வருகின்றனர்.

தில் ராஜூக்கு பெருகும் கண்டனம்
ஏற்கனேவே இரு ரசிகர்களும் சண்டை போட்டு வரும் நேரத்தில், வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல, தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் என்று கூறி பிரச்சனையை பெரிதாக்கி உள்ளார். தயாரிப்பாளரின் பேச்சுக்கு சோஷியல் மீடியாவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றனர்.

யார் நம்பர் 1
இந்நிலையில், தமிழ் சினிமாவின் மூத்த விநியோகஸ்தரும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் அளித்துள்ள பேட்டியில், ரஜினிகாந்த், விஜய், அஜித் தான் நம்பர் 1 என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் விக்ரம் படம் வெளியான பிறகு கமல்தான் நம்பர் 1 என்றார்கள்.

கதைதான் நம்பர் 1
அடுத்து பொன்னியின் செல்வன் படம் வெளியாகி விக்ரம் படத்தைவிட அதிக வசூலானது. அப்போ யார் நம்பர் 1 நடிகர் யார் விக்ரமா, கார்த்தியா, ஜெயம் ரவியா. சினிமாவைப் பொறுத்தவரை கதைதான் நம்பர் 1 என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நடிகர் அஜித்தோ, விஜய்யோ என்றாவது நாங்கள் தான் நம்பர் 1 என்று சொல்லியிருக்கிறார்களா? தில்ராஜு பேசுவதை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளக்கூடாது, அவர் ஏதோ ஆர்வக்கோளாறில் பேசிவிட்டார் என்றார்.

ஆர்வக்கோளாறு
இன்று விஜய்யை வைத்து படம் எடுத்திருப்பதால் விஜய் நம்பர் 1 என்று கூறுகிறார், நாளை அஜித்தை வைத்து படம் எடுத்தால் அஜித்தான் நம்பர் 1 என்று சொல்லுவார் இது வியாபாரா யுக்தி. ஒரு திரைப்படத்துக்கான ஓடிடி, சேட்டிலைட், ஓவர்சீஸ் உரிமைகள் விற்றுவிட்டாலே தயாரிப்பாளர்களுக்கான பணம் வந்து விடுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் நாமே ரிலீஸ் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்றார்.