Don't Miss!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- News
டான்ஸ் கத்துக்க வந்த அந்த 4 பேர் எங்கே?.. சந்தேகம் கிளப்பும் டான்ஸர் ரமேஷ் உறவினர்கள்!
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோடு MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நானே உதயநிதி கிட்டே பேசுறேன்.. வாரிசுக்குத்தான் அதிக தியேட்டர் வேணும்.. தில் ராஜு திடீர் முடிவு!
சென்னை: தமிழ்நாட்டில் நடிகர் விஜய் தான் பெரிய ஸ்டார் என்றும் அவருடைய வாரிசு படத்துக்கு 50 - 50 என்ற கணக்கில் தியேட்டர் ஒதுக்கக் கூடாது என்றும் கூடுதல் தியேட்டர்கள் தேவை என வாரிசு படத்தின் தில் ராஜு பேசியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.
அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்களுக்கு சரிசமமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வாரிசு படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் வேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜு பேசி இருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்படியெல்லாம் போஸ்டர் அடிக்காதீங்க.. கெட்ட வார்த்தை பேசாதீங்க.. ரசிகர்களுக்கு விஜய் அன்புக் கட்டளை!

விஜய் தான் நம்பர் ஒன்
தமிழ்நாட்டை பொறுத்தவரை நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என்றும், இது பிசினஸ் அதனால் விஜய்யின் வாரிசு படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும். அதுதான் கலெக்ஷனுக்கு சரியாக இருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜு பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் பெரிய புயலை கிளப்பி உள்ளது. அப்போ அஜித், ரஜினிகாந்த் எல்லாம் எத்தனையாவது இடம் என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

வாரிசுக்கு அதிகம் வேண்டும்
விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் தில் ராஜு தமிழ்நாட்டிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் வாரிசு படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார். ஆனால், இங்கே விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களுக்கு சரிசமமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்கிற நிலைப்பாட்டுக்கு அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.

உதயநிதி கிட்டே பேசுறேன்
துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில இடங்களில் வாரிசு படத்தையும் வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜு தானே நேரடியாக சென்னைக்கு கிளம்பி வந்து இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் பேசப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

உள்ளது போகாமல் இருந்தால் சரி
ஏற்கனவே துணிவு படத்தை ரிலீஸ் செய்தால் தான் அவதார் 2 படத்தை கொடுப்பேன் என்கிற பேரம் நடைபெற்று ஏஜிஎஸ் உள்ளிட்ட சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களே அவதார் படத்தை வெளியிட முடியாமல் திணறி வரும் நிலையில், தில் ராஜு இப்படி அதிக தியேட்டர்கள் கேட்டால் எப்படி கிடைக்கும் என்றும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் நேரடியாக மோதினால் நிச்சயம் இந்த பிரச்சனை எழத்தான் செய்யும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சு நிலவி வருகிறது.