»   »  முன்னாள் மனைவி எட்டடி பாய்ஞ்சா, பதினாறடி பாயும் கணவர் திலீப்!

முன்னாள் மனைவி எட்டடி பாய்ஞ்சா, பதினாறடி பாயும் கணவர் திலீப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
முன்னாள் மனைவிக்கு போட்டியாக களமிறங்கும் கணவர்..!!

கொச்சின் : மலையாள சினிமாவில் கெட்டப் மாற்றி நடிப்பதில் முதலிடம் நடிகர் திலீப்புக்குத்தான். 'சாந்துப்பொட்டு', 'குஞ்சுக்கூனன்' எனப் பல படங்களில் கெட்டப் மாற்றி நடித்திருக்கிறார் திலீப்.

இந்நிலையில், 'கம்மார சம்பவம்' என்கிற படத்தில் 90 வயது கிழவராக நடித்துள்ளார் திலீப். இந்தப் படத்தில் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் 'ஆமி' படத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திலீப்

திலீப்

மலையாள சினிமாவில் கெட்டப் மாற்றி நடிப்பதில் முதலிடம் நடிகர் திலீப்புக்குத்தான். ஏற்கனவே 'சாந்துப்பொட்டு', 'குஞ்சுக்கூனன்', 'பச்சகுதிர', 'சவுன்ட் தோமா', 'மாயமோகினி', 'கல்யாணராமன்' என நிறைய படங்களில் கெட்டப்பில் வித்தியாசம் காட்டி நடித்தவர் திலீப்.

கம்மார சம்பவம்

இப்போது தான் நடித்து வரும் 'கம்மார சம்பவம்' என்கிற படத்தில் 90 வயது கிழவராக நடித்துள்ளார் திலீப். மூன்றுவித காலகட்டத்தில் நடக்கும் இந்தப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள மூன்று கெட்டப்புகளில் இதுவும் ஒன்று.

சித்தார்த்

இதேபோல இதில் நடித்துள்ள நடிகர் சித்தார்த்துக்கும் மூன்று கெட்டப் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. ரதீஷ் அம்பாட் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பில் பாதி தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வெற்றிக்கு

அடுத்த வெற்றிக்கு

தமிழில் வெளியான 'அவள்' படத்தின் கௌரவமான வெற்றியை தொடர்ந்து சித்தார்த் தற்போது அதிகம் எதிர்பார்ப்பது மலையாளத்தில் தான் முதன்முதலாக நடித்துள்ள 'கம்மார சம்பவம்' படத்தைத்தான். இந்தப்படத்தின் ஹீரோ திலீப் என்றாலும் அவருக்கு இணையான கதாபாத்திரம் சித்தார்த்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாம்.

திலீப்பின் முன்னாள் மனைவி

திலீப்பின் முன்னாள் மனைவி

'ஆமி' படத்தில் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். 'ஆமி' திரைப்படத்தில் புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான கமலா தாஸ் கேரக்டரில் நடிக்கிறார் மஞ்சு வாரியர். இப்படத்தில் மஞ்சு வாரியரின் வயதான லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திலீப் பதினாறு அடி பாய்கிறார்

திலீப் பதினாறு அடி பாய்கிறார்

திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் கமலா தாஸ் கேரக்டருக்காக வயதான கெட்டப் போட்டால், திலீப் 90 வயது கிழவரைப் போல கெட்டப் போட்டு ஆச்சரியப் பட வைத்திருக்கிறார். இதை, முன்னாள் மனைவி எட்டடி பாய்ந்தால் கணவர் பதினாறடி பாய்வதாகப் பேசிக் கொள்கிறார்கள் மல்லுவுட் ரசிகர்கள்.

English summary
Dileep has acted as 90 years old men in 'Kammara sambavam' movie. Siddharth plays a prominent role in this film. Dileep's ex-wife Manju Warrier has played an aged role in 'Aami'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil