»   »  அதிரடி முடிவு எடுத்துடுச்சி அம்மா... நடிகர் சங்கம் இன்னும் ஏன் இருக்கு சும்மா?

அதிரடி முடிவு எடுத்துடுச்சி அம்மா... நடிகர் சங்கம் இன்னும் ஏன் இருக்கு சும்மா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பை அதிரடியாக நீக்கிவிட்டது மலையாள நடிகர் சங்கமான அம்மா. தவறு செய்தவர்கள் தங்கள் துறையில் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் ஆதரவு தரமாட்டோம் என்பதை பளிச்சென்று காட்டிவிட்டனர் கேரள திரையுலகினர். இத்தனைக்கும் அந்தக் கூட்டத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் இருவருமே கலந்து கொண்டனர். மம்முட்டி வீட்டில்தான் கூட்டமே நடந்தது குறிப்பிடத்தக்கது.

நீக்கப்பட்ட திலீப் நடிகர் மட்டுமல்ல... அம்மா அமைப்பின் பொருளாளர். தங்கள் பொருளாளரையே ஜஸ்ட் லைக் தட் தூக்கி எறிந்துவிட்டது அம்மா. ஆனால் இன்னமும் இதுகுறித்து எதுவும் பேசவில்லை தமிழகத்தில் இயங்கும் தென்னிந்திய நடிகர் சங்கம். நடிகர் திலீப் தமிழில் வெளியான ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்தின் தம்பியாக நடித்துள்ளார். ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை.

Dileep arrest: What is Nadigar Sangam's stand?

பாதிக்கப்பட்ட பாவனா நடிகர் சங்கத்தின் முழுமையான உறுப்பினர். பாவனா விவகாரம் வெளியில் வந்த போது பாவனாவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டது நடிகர் சங்கம். சங்கத்தின் செயலாளர் விஷாலும், பாவனாவுக்கு அனைத்து வகையிலும் உதவுவதாகத் தெரிவித்திருந்தார்.

இப்போது நடிகர் சங்கத்தின் உறுப்பினரான பாவனா பாதிக்கப்பட்டது வெளியாட்களால் அல்ல... திரைத்துறையின் முதன்மையான கலைஞர்களுள் ஒருவரான திலீப் மூலம்தான் என்று தெரிந்துவிட்டது.

இதுகுறித்து நடிகர் சங்கம் என்ன கூறப் போகிறது? குறைந்தபட்சம் திலீப்புக்கு கண்டனமாவது தெரிவிக்குமா?

English summary
What is Nadigar Sangam's stand in Bhavana abduction case? Will the association atleast condemn Dileep, the prime accused in the case?
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil