»   »  நான் போதைப்பொருளுக்கு அடிமையா, நீங்க பார்த்தீங்க?: பிரபல நடிகர் கோபம்

நான் போதைப்பொருளுக்கு அடிமையா, நீங்க பார்த்தீங்க?: பிரபல நடிகர் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நான் போதைப்பொருளுக்கு அடிமை என்று பொய்யான செய்தி பரப்பியவர்கள் மீது சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளிப்பேன் என்று நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் திலீப் தற்போது தனது மனைவி காவ்யா மாதவனுடன் அமெரிக்காவில் உள்ளார். இருவரும் சேர்ந்து அமெரிக்காவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு காவ்யா கலந்து கொள்ளும் முதல் மேடை நிகழ்ச்சி.

காவ்யா

காவ்யா

முன்னாள் மனைவி மஞ்சு வாரியரை போன்றே திருமணத்திற்கு பிறகு காவ்யாவையும் திலீப் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவில் நடந்து வரும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

போதை

போதை

திலீப் அமெரிக்காவில் இருக்கும் இந்த நேரத்தில் அவரை பற்றி ஏகப்பட்ட செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. அதில் ஒன்று அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டது என்ற செய்தி.

திலீப்

திலீப்

தான் ஊரில் இல்லாத நேரத்தில் தன்னைப் பற்றி பரவிய செய்தி திலீப்புக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

வழக்கு

வழக்கு

என் வாழ்க்கை பற்றியும், என்னை பற்றியும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருபவர்கள் மீது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிப்பேன் என்று திலீப் கூறியுள்ளாராம்.

English summary
Malayalam actor Dileep has decided to contact cyber crime against those who spread fals news about him while he is away from Kerala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil