»   »  காவ்யா மாதவனைப் பார்த்ததும் கதறி அழுத திலீப்!

காவ்யா மாதவனைப் பார்த்ததும் கதறி அழுத திலீப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : பிரபல மலையாள நடிகை கடந்த பிப்ரவரி மாதம் காரில் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

திடீர் திருப்பமாக, சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் சமீபத்தில் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த பல்சர் சுனில், நடிகை கடத்தல் வழக்கில் தான் குறிப்பிட்ட 'மேடம்' காவ்யா மாதவன் தான் என்றார். தொடர்ந்து காவ்யா மாதவனிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் வலுவான ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.

 காவ்யா மாதவன் சுற்றிவளைப்பு :

காவ்யா மாதவன் சுற்றிவளைப்பு :

போலீஸ் விசாரணையில், பல்சர் சுனில், காவ்யா மாதவனின் தம்பி மிதுன் மாதவன் திருமண வீடியோவில் பல்சர் சுனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர கொச்சியில் உள்ள காவ்யா மாதவன் வீட்டிற்கு பல்சர் சுனில் சென்ற விவரம், வீட்டு செக்யூரிட்டி என்ட்ரி நோட்டில் பைக் எண்ணுடன் குறிப்பிடப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவ்யா மாதவனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 திலீப் - காவ்யா மாதவன் சந்திப்பு :

திலீப் - காவ்யா மாதவன் சந்திப்பு :

திலீப் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்களை நெருங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் திலீப்பின் தாயார் அவரைச் சந்தித்துப் பேசினார். ஆனாலும், மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி ஆகியோர் சந்திக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காவ்யா மாதவன், மீனாட்சி ஆகியோர் சிறைக்கு சென்று திலீப்பைச் சந்தித்து பேசினர்.

 கதறி அழுத திலீப் :

கதறி அழுத திலீப் :

சுமார் 20 நிமிடங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். முதல் ஐந்து நிமிடங்கள் யாரும் பேசிக்கொள்ளாமல் திலீப் மனைவி, மகளைப் பார்த்து கதறி அழுதார். முன்னதாக நேற்று திலீப்பின் நண்பரும், நடிகருமான நாதிர்ஷாவும் அவரை சந்தித்து பேசினார்.

 காவல் நீட்டிப்பு :

காவல் நீட்டிப்பு :

சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப்பின் நீதின்றக் காவல் நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் வரும் 16-ம் தேதி வரை காவலை நீட்டித்து அங்கமாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதி

அனுமதி

திலீப்பின் தந்தையின் நினைவுநாள் பிரார்த்தனைக்குச் செல்வதற்காக ஒரு நாள் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார் திலீப். போலீசாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரண்டு மணி நேரம் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

English summary
Actor Dileep was arrested by police in actress kidnap case. Dileep cried when Kavya Madhavan visited him with daughter Meenakshi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil