»   »  கேரள நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்... 'அம்மா' சங்கக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

கேரள நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்... 'அம்மா' சங்கக் கூட்டத்தில் அதிரடி முடிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திட்டம் போட்டு பாவனாவைக் கடத்தி மானபங்கம் செய்த வழக்கில் கைதாகியுள்ள திலீப்பை மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது கேரள திரையுலகை உலுக்கியுள்ளது. திலீப் கைது செய்யப்பட்ட உடனே மலையாள நடிகர் சங்கமான அம்மா அவசர கூட்டம் நடத்தியது. கொச்சியில் உள்ள நடிகர் மம்முட்டியின் வீட்டில் இந்த அவசரக் கூட்டம் நடந்தது. இந்த சங்கத்தின் பொருளாளராக உள்ளார் நடிகர் திலீப்.

Dileep expelled from AMMA

திலீப்புக்கு ஆதரவாகவும் பாவனாவுக்கு எதிராகவும் சில மலையாள நடிகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு அம்மா கடும் கண்டனம் தெரிவித்தது.

முறையான விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளியைக் கைது செய்த கேரள அரசுக்கும் போலீசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அம்மா அமைப்பிலிருந்து நடிகர் திலீப் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் நடிகர் மோகன் லால், மம்முட்டி, ரம்யா நம்பீசன், தேவன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கூட்டத்துக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அம்மா பொதுச் செயலாளரான மம்முட்டி மேற்கொண்டு எதையும் பேச மறுத்துவிட்டார்.

English summary
Actor Dileep was expelled from the Association of Malayalam Movie Artistes (AMMA)
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil