»   »  திலீப்புக்காக ஓவராக சவுண்டு கொடுத்த நடிகர் முகேஷிடம் சிபிஎம் விசாரணை

திலீப்புக்காக ஓவராக சவுண்டு கொடுத்த நடிகர் முகேஷிடம் சிபிஎம் விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு ஆதரவாக பேசிய நடிகர் முகேஷிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விசாரணை நடத்தியுள்ளது.

நடிகை பாவனா கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Dileep issue: CPM investigates actor Mukesh

அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இதையடுத்து அவர் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

நடிகர் மம்மூட்டியின் வீட்டில் அம்மா செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. அந்த கூட்டத்தில் தான் திலீப்பை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அம்மா அமைப்பின் பொருளாளராக இருந்து வந்தார் திலீப்.

Dileep issue: CPM investigates actor Mukesh

இதற்கிடையே திலீப்புக்கு ஆதரவாக பேசிய நடிகர் முகஷேிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். கொல்லம் சட்டசபை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. வாக உள்ள முகேஷ் நடிகை சரிதாவின் முன்னாள் கணவர்.

கடந்த மாதம் 28ம் தேதி நடந்த அம்மா கூட்டத்தில் கலந்து கொண்ட முகேஷ் பாவனா விஷயத்தில் திலீப்புக்கு ஆதரவாக கத்தி கத்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
CPM officials are investigating their party MLA from Kollam actor Mukesh in connection with Dileep issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil