»   »  இதுவரை 15 முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்!! - திலீப், காவ்யா மாதவன்

இதுவரை 15 முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்!! - திலீப், காவ்யா மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இதுவரை எங்களுக்கு 15 முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் மீடியாவில் என நடிகர் திலீப்பும், காவ்யா மாதவனும் தெரிவித்துள்ளனர்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். பிரபல நடிகை மஞ்சு வாரியரை காதல் திருமணம் செய்தார். இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தனர் இருவரும்.

காவ்யாதான் காரணமா?

காவ்யாதான் காரணமா?

இந்த விவாகரத்துக்கு காரணம் நடிகை காவ்யா மாதவனுடன் நடிகர் திலீப்புக்கு ஏற்பட்ட தொடர்புதான் என்றும், இருவரும் சேர்ந்தே இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை இருவரும் மறுத்தனர்.

திருமணம்

திருமணம்

இந்தநிலையில் காவ்யா மாதவனை வருகிற 16-ந்தேதி குருவாயூர் கோவிலில் வைத்து நடிகர் திலீப் திருமணம் செய்ய இருக்கிறார் தகவல் பரவியது.

இந்த முறையும் தனது மறுப்பை திலீப் தெரிவித்துள்ளார்.

15 முறை

15 முறை

அவர் கூறுகையில், "கடந்த ஓராண்டில் மட்டும் 15 முறை எனக்கும் காவ்யா மாதவனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள் மீடியாவில். எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றினால், அதை நானே உங்களுக்கு தெரிவிப்பேன். இப்போது வெளியாகி இருக்கும் தகவல் புரளி. அதில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.

புரளி

புரளி

இதுகுறித்து காவ்யா மாதவன் கூறுகையில், " இந்த தகவலில் உண்மை இல்லை. அது வெறும் புரளி. எனது வாழ்க்கையில் ஏதாவது நல்ல தருணங்கள் ஏற்பட்டால் அதை நானே உங்களுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுங்கள்," என்றார்.

English summary
Actor Dileep and Kavya Madhavan have denied their marriage news and say all are just rumours.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil