»   »  முக்கோண காதல் கதைகளை படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ரசிக்கும் ரசிகர்கள்!

முக்கோண காதல் கதைகளை படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ரசிக்கும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: முக்கோணக் காதல் கதைகளில் அப்படி என்ன இருக்கிறதோ .. படத்தில் ரசிப்பது மட்டும் அல்லாமல் நிஜத்தில் ரசிப்பதற்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

மலையாள நடிகர் தீலிப் அவரின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் மற்றும் நடிகை காவியா மாதவன் மூவரை பற்றியும் செய்தி வராத நாட்களே இல்லை

மூவருமே படவுலகில் இருப்பதால் பட வெளியீட்டின் போது மோதிக் கொள்வதும் பரபரப் பான செய்திகள் எதுவும் இல்லாவிட்டால் பத்திரிக்கைகள் இவர்கள் மூவரையும் வறுத்து எடுப்பதும் என மலையாள பட உலகம் மட்டும் அல்லது இந்திய திரை உலகமே இவர்கள் பிரச்சினைகளை தொடர்ந்து கவனித்து வருகிறது

மல்லுவுட்டுக்கு முன்னோடி பாலிவுட்

மல்லுவுட்டுக்கு முன்னோடி பாலிவுட்

இந்த விசயத்தில் இவர்களின் முன்னோடி என்று அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ரேகா இம்மூவரையும் குறிப்பிடலாம் ஆமாம் ரொம்ப வருடங்களாக ஏன் அமிதாப் பேத்தி எடுத்து விட்ட இந்த வயதிலும் ரேகா அமிதாப்பைப் பற்றிய கிசுகிசுக்கள் சற்றும் குறையவில்லை

திலீப்பும் மஞ்சுவும்

திலீப்பும் மஞ்சுவும்

மலையாள பட உலகில் மிகப் பிரபலமாக இருந்த போது நடிகர் தீலிப்பை திருமணம் செய்து கொண்ட மஞ்சு வாரியர் சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையை கவனிக்க ஆரம்பித்தார்.

குடும்பத்திற்குள் நுழைந்த புயல்

குடும்பத்திற்குள் நுழைந்த புயல்

மற்றொரு மலையாள நடிகையான காவ்யா மாதவனால் மஞ்சு வாரியரின் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது. தீலிப் காவியா இடையில் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக கூறியவர்கள் நிஜத்திலும் கெமிஸ்ட்ரி இருப்பதாக கூற இந்த பிரச்சினை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது

அணையாத தீ

அணையாத தீ

எப்போதெல்லாம் இந்தப் பிரச்சினை சற்று தணிகிறதோ அப்போது யாராவது ஒரு மகராசன் இதை சற்று ஊதி விட்டு வேடிக்கை பார்ப்பார்

காவியா மாதவன்

காவியா மாதவன்

மஞ்சு வாரியாரை விட அப்படி ஒன்றும் அழகில் சிறந்தவர் அல்ல காவியா. ஆனால் தீலிப்பின் ரசனை வேறு மாதிரியாக இருந்தது. 2011 ம் ஆண்டு இவர் தன கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதும் பிரச்சினை மேலும் அதிகமானது. தீலிப்புடன் தொடர்ந்து படங்களின் வாயிலாக காவியா தொடர்பில் இருக்க ஆரம்பித்தார்

மஞ்சுவை மறந்த திலிப்

மஞ்சுவை மறந்த திலிப்

மஞ்சு தீலிப் இடையே 16 வருடங்கள் நீடித்த குடும்ப வாழ்க்கை இந்த ஆண்டு ஜனவரியில் விவாகரத்து மூலமாக முடிவுக்கு வந்தது. இந்த வாழ்வுக்கு சாட்சியாக இருந்த ஒரே மகளை கணவருக்கு விட்டு கொடுத்தார் மஞ்சு.

மனம் தளராத மஞ்சு

மனம் தளராத மஞ்சு

ஹௌ ஓல்ட் ஆர் யூ படத்தின் வாயிலாக மீண்டும் தன்திரை வாழ்க்கையைத் துவக்கி இருக்கும் மஞ்சு கல்யாண் ஜுவல்லர்சின் கேரள பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். மஞ்சு மீண்டும் மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஆகி விட்டார்.

ஏன் இந்தத் தயக்கம்

ஏன் இந்தத் தயக்கம்

தொடர்ந்து மீடியாக்களுக்கு மனம் தளராமல் பேட்டி அளிக்கும் தீலிப் காவியா மாதவன் பற்றிய பேச்சையே எடுப்பதில்லை. விவாகரத்து ஆகிய பின்னும் ஏன் இன்னும் காவியா மாதவனை மணம் புரியவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.


எது எப்படியோ மூன்று பேரின் படத்துக்கும் இலவச விளம்பரமாக இந்த விவகாரம் இருந்து வருகிறது... சட்டுன்னு முடிவெடுங்கப்பா!

English summary
In the last few days Dileep has given multiple interviews, and each time the triangle has become the headline.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil