»   »  கடவுளே எங்க எதிரிகள் எல்லாம் அழிஞ்சு போணும்: சத்ருசம்ஹார பூஜை செய்த நடிகர்

கடவுளே எங்க எதிரிகள் எல்லாம் அழிஞ்சு போணும்: சத்ருசம்ஹார பூஜை செய்த நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் திலீப் தனது மனைவியுடன் சேர்ந்து சத்ருசம்ஹார பூஜை செய்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு பிரச்சனையாக உள்ளது. திலீப் தான் ஆள் வைத்து நடிகையை அசிங்கப்படுத்தியதாக ஆளாளுக்கு பேசுகிறார்கள்.

நான் அப்பாவி என்று அவர் கூறுவதை யாரும் நம்பவில்லை.

கோவில்

கோவில்

கேரள மாநிலத்தில் உள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உள்ளவர் திலீப். நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்த பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை தான் முதல் முறையாக அந்த கோவிலுக்கு சென்றார்.

திலீப்

திலீப்

திலீப் தனது மனைவி காவ்யாவுடன் பகவதி அம்மன் கோவிலுக்கு அதிகாலையில் சென்றார். அங்கு அவரும், காவ்யாவும் சேர்ந்து சத்ருசம்ஹார பூஜையில் கலந்து கொண்டனர்.

காவ்யா

காவ்யா

எதிரிகளை அழிக்கவே இந்த சத்ருசம்ஹார பூஜை செய்யப்பட்டுள்ளது. திலீப்பும், காவ்யாவும் நாள் முழுவதும் கோவிலிலேயே இருந்துவிட்டு மாலை 5 மணிக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.

ரெய்டு

ரெய்டு

நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக காவ்யாவுக்கு சொந்தமான கடையில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் போலீசா் காவ்யாவின் வீட்டில் சோதனை செய்ய சென்று அங்கு யாரும் இல்லாததால் திரும்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Malayalam actor Dileep and his wife Kavya Madhavan offered Shathru Samhara pushpanjali at Kodungallur Bhagavathy Temple.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil