»   »  மறைந்த நடிகர் ரதீஷுக்காக 'அந்த ஒரு' கொள்கையை தளர்த்திய திலீப், மஞ்சு வாரியர்

மறைந்த நடிகர் ரதீஷுக்காக 'அந்த ஒரு' கொள்கையை தளர்த்திய திலீப், மஞ்சு வாரியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மறைந்த நடிகர் ரதீஷுக்காக நடிகர் திலீப்பும் அவரது முன்னாள் மனைவி மஞ்சுவும் தங்களின் கொள்கையை தளர்த்தியுள்ளனர்.

மலையாள நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். 14 ஆண்டுகள் தம்பதிகளாக இருந்த அவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டனர்.

Dileep and Manju relax rule for late actor Ratheesh

மீனாட்சி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த மஞ்சு தற்போது நடித்து வருகிறார். விவாகரத்திற்கு பிறகு ஒருவரையொருவர் சந்திப்பதை மஞ்சுவும், திலீப்பும் தவிர்த்து வருகிறார்கள்.

எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டுவிடக் கூடாது என்ற கொள்கை வைத்துள்ளனர். அதாவது ஒரு நிகழ்ச்சிக்கு திலீப் வருகிறார் என்றால் மஞ்சு அந்த பக்கமே செல்ல மாட்டார். அதே போன்று திலீப்பும் மஞ்சு கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த கொள்கையை அவர்கள் மறைந்த நடிகர் ரதீஷுக்காக தளர்த்தியுள்ளனர்.

உடன் பிறவா சகோதரரான ரதீஷின் மகள் பத்மாவின் திருமண நிகழ்ச்சியில் மஞ்சுவும், திலீப்பும் கலந்து கொண்டனர். ஆனால் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்காமல் திருப்பிக் கொண்டு சென்றுவிட்டனர்.

English summary
Dileep and Manju Warrier, the divorced star couple recently met at the marriage venue of late actor Ratheesh's daughter Padma Ratheesh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil