»   »  16 வயது மகள் முன்னிலையில் 16 வயது சிறியவரான காவ்யாவை மணந்த நடிகர் திலீப்

16 வயது மகள் முன்னிலையில் 16 வயது சிறியவரான காவ்யாவை மணந்த நடிகர் திலீப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் திலீப் தனது 16 வயது மகள் முன்னிலையில் தன்னைவிட 16 வயது சிறியவரான நடிகை காவ்யா மாதவனை இன்று மணந்தார்.

மலையாள நடிகர் திலீப் நடிகை காவ்யா மாதவனை இன்று கொச்சியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். மனைவி மஞ்சுவை விவாகரத்து செய்த திலீப்பும், கணவரை பிரிந்த காவ்யாவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று மலையாள திரையுலகம் எதிர்பார்த்து வந்தது.

இந்நிலையில் தான் இன்று திருமணம் நடைபெற்றது.

திருமணம்

திருமணம்

கொச்சியில் உள்ள வேதாந்தா ஹோட்டலில் குடும்பத்தார், சில நண்பர்கள் முன்னிலையில் இன்று திலீப், காவ்யா மாதவன் திருமணம் நடைபெற்றது.

மீனாட்சி

மீனாட்சி

திருமணத்தில் திலீப்பின் மகளான 16 வயது மீனாட்சி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது அவர் தனது தந்தையின் அருகிலேயே இருந்தார். எனக்கு திருமணம் நடந்தால் அது என் மகளின் வாழ்த்துக்களோடு தான் நடக்கும் என திலீப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

காவ்யா மாதவன்

காவ்யா மாதவன்

திலீப் தனது 16 வயது மகள் முன்னிலையில் தன்னை விட 16 வயது குறைவான நடிகை காவ்யா மாதவனை மணந்துள்ளார். திலீப்புக்கு 48 வயதாகிறது. காவ்யாவுக்கு வயது 32.

மஞ்சு

மஞ்சு

திலீப்பும், மஞ்சுவும் பிரிந்த போது மீனாட்சி தனது தந்தையுடன் இருப்பதாக தெரிவித்தார். இதை அறிந்த மஞ்சு கோபப்படாமல் மீனாட்சி அவரது தந்தை மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்று எனக்கு தெரியும், அவள் தனது தந்தையிடம் பத்திரமாக இருப்பாள் என்றார்.

English summary
Actor Dileep has married actress Kavya Madhavan with his 16-year old daughter's wishes on friday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil