»   »  வாய்ச் சவடால் விட்டு போலீசில் வசமாக சிக்கிய நடிகர் திலீப்

வாய்ச் சவடால் விட்டு போலீசில் வசமாக சிக்கிய நடிகர் திலீப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: ஓவராக வாய்ச் சவடால் விட்ட நடிகர் திலீப் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி கேரளாவில் காரில் கடத்தப்பட்டு 2 மணிநேரம் மானபங்கப்படுத்தப்பட்டார். இதை அந்த கயவர்கள் வீடியோவும் எடுத்தனர்.

இந்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் பெயர் அடிபட்டது.

அப்பாவி

அப்பாவி

நான் அப்பாவி. எனக்கும் பாவனா கடத்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்னை பெற்றது ஒரு பெண், எனக்கு பிறந்தது ஒரு பெண் என்று திலீப் சென்டிமென்டாக பேசினார்.

சந்தேகம்

சந்தேகம்

திலீப் என்ன தான் சொன்னாலும் அனைவருக்கும் அவர் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. மீடியாக்கள் தான் வேண்டும் என்றே என் பெயரை கெடுக்கின்றன என்று பத்திரிகையாளர்கள் மீது பழியை போட்டார் திலீப்.

விசாரணை

விசாரணை

பாவனா விஷயத்தில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க உண்மையை கண்டறியும் சோதனை உள்பட எந்த சோதனைக்கும் தயார் என்று திலீப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

புகார்

புகார்

பாவனா விஷயத்தில் உண்மையை கண்டறியுமாறு திலீப் அலுவா காவல் நிலையத்தில் புகார் வேறு அளித்தார். தன் மீது எந்த தவறும் இல்லை என்பது போன்று காட்டிக் கொண்டார். ஆனால் பாவனா விஷயத்தில் சதித் திட்டம் தீட்டியது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
Dileep's acting in real life has failed to save him from bars. Dileep is held in Bhavana abduction case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil