»   »  சங்கு சக்கரம்... ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் ஹீரோவாகிறார்!

சங்கு சக்கரம்... ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் ஹீரோவாகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திலீப் சுப்பராயன்.. இன்றைய தேதிக்கு கோடம்பாக்கத்தில் பிஸி ஸ்டன்ட் மாஸ்டர். இப்போது இவரும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

குழந்தைகள் ஸ்பெஷலாக வரும் இந்தப் படத்துக்கு சங்கு சக்கரம் என்று தலைப்பிட்டுள்ளனர். 'குடும்பத்தோடு வந்து பார்த்து, பொங்கி சிரித்து பூரித்து ரசித்து மகிழும் படமாக இந்தப் படம் உருவாகிறது' என்கிறார் படத்தை இயக்கி வரும் மாரீசன்.

Dileep Subbarayan to make his screen appearance

லியோ விஷன்ஸ் சார்பில் வி எஸ் ராஜ்குமாரும் சினிமா வாலா பிக்சர்ஸ் சார்பில் கே சதீஷும் தயாரிக்கும் படம் இது .

பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்பது போல, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற நகைச்சுவையும் கிண்டல் கேலியும் நிறைந்த படங்களை தயாரித்தவர்கள் இவர்கள்தான் என்று சொன்னாலே, இந்த சங்கு சக்கரம் படமும் எப்படி இருக்கும் என்பதை உணர முடிகிறது அல்லவா?

ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், கீதா, பசங்க படப் புகழ் நிஷேஷ் ஆகியோருடன் எட்டு சிறுவர் சிறுமியர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் இது .

இந்த குட்டீஸ்கள் செய்யும் சில வீர தீர செயல்கள், சந்திக்கும் சிக்கல்கள், ஆகியவற்றை திரில்லாகவும் நகைச்சுவையாகவும் சங்கு சக்கரம் படத்தில் சொல்கிறார்கள்.

ஜில் ஜங் ஜக் படத்தின் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர்தான் இந்தப் படத்துக்கும் இசை அமைக்கிறார்.

'படத்துக்கு சங்க சக்கரம் என்று பெயர் வைத்தது ஏன்?' என்று கேட்டால், "சஸ்பென்ஸ் , திரில், சுவாரஸ்யம், கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி, எள்ளல், ஏகடியம் எல்லாம் கலந்த ஒரு சுழலில், படம் பார்க்கும் ரசிகர்கள் சிக்கிச் சுழன்று சந்தோஷத்தில் திளைப்பார்கள். அதாவது தீபாவளிக்கு சங்கு சக்கரம் விடுகிற மாதிரியான சந்தோஷத்தில். அதுதான் சங்கு சக்கரம்," என்கிறார்.

நல்லாத்தான் இருக்கு விளக்கம்!

English summary
Top stunt master Dileep Subbarayan is making his first screen appearance in key role in ‘Sangu Chakkaram’, directed by Maarison.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil