»   »  போட்டுக் கொடுத்த பாவனாவை கங்கனம் கட்டி பழிவாங்கிய நடிகர் திலீப்

போட்டுக் கொடுத்த பாவனாவை கங்கனம் கட்டி பழிவாங்கிய நடிகர் திலீப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனக்கும், காவ்யாவுக்கும் இடையே இருந்த தொடர்பு பற்றி மஞ்சுவிடம் போட்டுக் கொடுத்த பாவனாவை நடிகர் திலீப் பழிவாங்கினார். இதை பாவனாவே தெரிவித்தார்.

நடிகர் திலீப் தனது காதல் மனைவி மஞ்சு வாரியரை பிரிந்தார். அவருக்கும் நடிகை காவ்யா மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பால் அவர் மஞ்சுவை பிரிந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் திலீப் காவ்யாவையே திருமணம் செய்து கொண்டார்.

பாவனா

பாவனா

திலீப்புக்கும், காவ்யாவுக்கும் இடையேயான தொடர்பை கண்டுபிடித்த நடிகை பாவனா உடனே தனது தோழி மஞ்சுவிடம் தெரிவித்துவிட்டார். பாவனா போட்டுக் கொடுத்தது திலீப்புக்கும் தெரிய வந்தது.

திலீப்

திலீப்

தன்னை பற்றி மஞ்சுவிடம் போட்டுக் கொடுத்த பாவனாவை திலீப் தனது ஸ்டைலில் பழிவாங்கிவிட்டார். அதாவது பாவனாவுக்கு மலையாள பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காதபடி செய்தார்.

புகார்

புகார்

உண்மையை சொல்லியதற்காக திலீப் தன்னை பழிவாங்குவதாக பாவனா தெரிவித்திருந்தார். தனது கையில் புதுப் படங்கள் இல்லாமல் போனதற்கு திலீப்பே காரணம் என அவர் புகார் தெரிவித்தார்.

திருமணம்

திருமணம்

திலீப் தனது 2வது திருமணத்திற்கு பாவனாவை அழைக்கவில்லை. திலீப் காவ்யாவை திருமணம் செய்ததை மஞ்சு டிவியில் லைவாக பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Bhavana said that actor Dileep was the reason for her being in Mollywood without any new movie offers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil