»   »  ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்

ஆமாம், மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் பிரச்சனை இருந்தது: நடிகர் திலீப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தனக்கும் காரில் கடத்தப்பட்ட நடிகைக்கும் பிரச்சனை இருந்தது உண்மை தான் என்று மலையாள நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடு திரும்பும்போது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த சம்பவத்திற்கு மலையாள நடிகர் திலீப் தான் காரணம் என்று மலையாள திரையுலகில் பேசினார்கள்.

இந்நிலையில் இது குறித்து தற்போது திலீப் கூறியிருப்பதாவது,

பிரச்சனை

பிரச்சனை

கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட நடிகைக்கும் எனக்கும் இடையே பிரச்சனை இருந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அதற்காக நான் அவரை கடத்தி அசிங்கப்படுத்தவில்லை.

ஆறுதல்

ஆறுதல்

அந்த நடிகை கடத்தப்பட்ட செய்தி அறிந்ததும் அவரின் அம்மாவுக்கு போன் செய்து ஆறுதல் கூறியவன் நான். அவரை நான் ஹீரோயினாக்கினேன். என் ஆறு படங்களில் அவரை ஹீரோயினாக நடிக்க வைத்தேன்.

நடிகை

நடிகை

என் படங்களில் அவரை ஹீரோயினாக போடுமாறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் கூறினேன். அவரை பரிந்துரை செய்து நடிக்க வைத்த நான் ஏன் அவரை அசிங்கப்படுத்த வேண்டும்.

திலீப்

திலீப்

நடிகையின் வாழ்வில் நடந்த துயர சம்பவத்திற்கு நான் தான் காரணம் என்று சிலர் தேவையில்லாமல் பேசி வருகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் இல்லை என்றார் திலீப்.

English summary
Malayalam actor Dileep said that there were issues between him and the actress who was abducted and molested recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil