»   »  அதை கேட்டு தற்கொலை செய்ய நினைத்தேன்: பிரபல நடிகர் பகீர் பேட்டி

அதை கேட்டு தற்கொலை செய்ய நினைத்தேன்: பிரபல நடிகர் பகீர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: என்னை பற்றி வந்த வதந்திகளால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்று மலையாள நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் திலீப் தான் ஆள் வைத்து அந்த பிரபல நடிகையை காரில் கடத்தி மானபங்கம் செய்ய வைத்தார் என்று மலையாள திரையுலகில் பேச்சாக கிடந்தது.

இந்நிலையில் நடிகர் திலீப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

வதந்தி

வதந்தி

நடிகை காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் அதற்கு நான் தான் காரணம் என்று மும்பையை சேர்ந்த மீடியா ஹவுஸ் கிளப்பிவிட மற்றவர்கள் அதையே பிடித்துக் கொண்டனர்.

சகித்துக் கொண்டேன்

சகித்துக் கொண்டேன்

என் வாழ்க்கை பற்றிய வதந்திகளை நான் பல ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டுள்ளேன். என்னை பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பது எனக்கு கவலை இல்லை.

பொய்

பொய்

அண்மை காலமாக என்னை பற்றி வரும் வதந்திகளை மக்கள் உண்மை என்று நம்பத் துவங்கியுள்ளதால் நான் அது குறித்து பேசுகிறேன். அதிலும் குறிப்பாக நடிகை தொடர்பான வதந்தி.

தற்கொலை

தற்கொலை

நடிகை மானபங்கப்படுத்தப்பட்டதற்கு நான் தான் காரணம் என்று வந்த வதந்திகளால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் என் மகள் மீனாட்சியை நினைத்து தற்கொலை செய்யவில்லை என்றார் திலீப்.

English summary
Malayalam actor Dileep said that he thought of committing suicide after rumours spread accusing him for an actress' molestation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil