»   »  நடிகர் திலீப்குமார் கவலைக்கிடம்!

நடிகர் திலீப்குமார் கவலைக்கிடம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழம்பெரும் நடிகர் திலீப்குமார் உடல் நலக் குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

93 வயதாகும் திலீப் குமார், அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் பெஷாவர் நகரில் பிறந்தவர். 1944-ல் முதல் படம் ஜ்வார் பட்டா மூலம் அறிமுகமானார்.

Dilip Kumar admitted in Lilavathi Hospital

‘அந்தாஸ்', ‘தேவதாஸ்', ‘மொகலே ஆஸம்', ‘ஆஸாத்' உள்பட சுமார் 60 படங்களில் நாயகனாக நடித்த திலிப் குமார், 8 பிலிம்பேர் விருதுகளை வென்றவர்.

இதுதவிர, 1991-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மபூஷன் விருது, 1994-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது, 1997-ம் ஆண்டு பாகிஸ்தான் வழங்கிய நிஷான் இ இம்தியாஸ் விருது, 2015-ம் ஆண்டு பதம்விபூஷன் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள திலிப் குமாரின் இயற்பெயர் முஹம்மது யூசுப் கான்.

பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக ஐந்தாண்டுகள் பதவி வகித்த இவர், தனது இரண்டாவது மனைவி சாய்ரா பானுவுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

நேற்றிரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவரது உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

English summary
Veteran actor Dilip Kumar was admitted to the Lilavati Hospital in Mumbai earlier Saturday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil