»   »  சுயநினைவுடன் இருக்கிறார், ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டார் திலீப் குமார்.. டாக்டர்கள் தகவல்

சுயநினைவுடன் இருக்கிறார், ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டார் திலீப் குமார்.. டாக்டர்கள் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் இருந்த பழம்பெரும் நடிகர் திலீப்குமார் தற்போது ஆபத்தான நிலையைக் கடந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பாகிஸ்தானில் ஒரு பகுதியாக இருக்கும் பெஷாவர் நகரில் 1922-ல் பிறந்தவர் திலீப்குமார். பின்னர் அங்கிருந்து மும்பை வந்து நாடகங்களில் நடித்த அவர், 1944-ல் ‘ஜுவார் பாட்டா' என்ற படத்தில் நடித்து இந்தி பட உலகில் அறிமுகமானார்.

தேவதாஸ், மொகலே ஆஸம், ஆஸாத் உள்பட 60-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள திலீப்குமார், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக கொடி கட்டி பறந்தார். .

விருதுகள்...

விருதுகள்...

இவரது நடிப்பைப் பாராட்டி 1991-ல் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது. தாதாசாகேப் பால்கே விருதும் பெற்றார். பாகிஸ்தானும் நிஷான் இ இம்தியாஸ் விருதை வழங்கி கவுரவித்தது. இவர் மத்திய அரசின் பத்ம விபூஷன் விருதையும் பெற்றுள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராகவும் 5 ஆண்டுகள் பதவி வகித்த திலீப் குமாருக்கு, தற்போது 93 வயதாகிறது.

திடீர் உடல்நலக்குறைவு...

திடீர் உடல்நலக்குறைவு...

இதனால் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த அவருக்கு, நேற்று அதிகாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கவலைக்கிடமான நிலை...

கவலைக்கிடமான நிலை...

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால், இந்தி நடிகர்-நடிகைகள் பலர் நேரில் சென்று அவரது உடல் நிலையை விசாரித்து வந்தனர்.

ஆபத்து நீங்கியது...

ஆபத்து நீங்கியது...

இந்நிலையில் தற்போதும் அவர் அதே நிலையில் இருப்பதாகவும், எனினும் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, தற்போது அவர் உணர்வுடன் இருப்பதாகவும், உணவு எடுத்துக் கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Legendary actor Dilip Kumar, who was hospitalised due to "high fever and chest infection", is recovering well, says doctors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil