»   »  கேவலமாக விமர்சிக்கப்பட்டும் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த தில்வாலே

கேவலமாக விமர்சிக்கப்பட்டும் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்த தில்வாலே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷாருக்கான், கஜோல் நடித்த தில்வாலே படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், கஜோல் நடித்த தில்வாலே படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸானது. அதே நாளில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடித்த பாஜிராவ் மஸ்தானி படமும் வெளியானது.

பாக்ஸ் ஆபீஸில் பாஜிராவ் மஸ்தானியை தில்வாலே முந்தியுள்ளது.

தில்வாலே

தில்வாலே

தில்வாலே படத்தை பார்த்த விமர்சகர்கள் அதை திட்டித் தீர்த்து, துப்பாத குறையாக விமர்சனம் எழுதியிருந்தனர். தில்வாலே படத்தை பார்த்தால் உங்களுக்கு மாரடைப்பு வரும், அப்புறம் மர்டாலே தான் என்றெல்லாம் விமர்சனம் வெளியானது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

தில்வாலே படத்திற்கு இவ்வளவு கேவலமான விமர்சனம் வெளியாகியும் ரசிகர்கள் மட்டும் அதை எல்லாம் காதில் வாங்கவே இல்லை. நீங்கள் பாட்டுக்கு விமர்சியுங்கள், நாங்கள் பாட்டுக்கு தியேட்டருக்கு சென்று படத்தை ஹிட்டாக்குவோம் என்ற முடிவில் உள்ளனர்.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

தில்வாலே ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.121 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.65.09 கோடியும், வெளிநாடுகளில் ரூ.56 கோடியும் வசூலித்துள்ளது.

பாஜிராவ் மஸ்தானி

பாஜிராவ் மஸ்தானி

நிஜ வாழ்வில் காதலர்களான ரன்வீர் சிங், தீபிகா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள பாஜிராவ் மஸ்தானி படம் மூன்று நாட்களில் ரூ. 46.77 கோடி வசூலித்துள்ளது.

English summary
In the box office race, 'Dilwale' has remained ahead of 'Bajirao Mastani'. While the Shah Rukh Khan starrer crossed the Rs.100 mark worldwide in its opening weekend, the historical drama, featuring Ranveer Singh and Deepika Padukone, minted Rs.46.77 crore in India in three days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil