»   »  புனிதம் போற்றும் மனிதர்களே.. நாளை 7 தமிழர்களுக்காக கூடுங்கள்.. இயக்குநர் கவுமதன்

புனிதம் போற்றும் மனிதர்களே.. நாளை 7 தமிழர்களுக்காக கூடுங்கள்.. இயக்குநர் கவுமதன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புனிதம் போற்றும் மனிதர்கள் நாளை வேலூர் சிறை முன்பு கூடி வாகனப் பேரணியில் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று இயக்குநர் கவுதமன் கூறியுள்ளர்.

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி நாளை நடைபெறவுள்ள வாகனப் பேரணி குறித்து இயக்குநர் கவுதமன் கூறியுள்ளதாவது:

Directior Gowthaman urges all to attend the motorcycle rally tomorrow

25 ஆண்டுகளாக நான்கு சுவர்களுக்குள்ளாகவே கூனி குறுகி சித்ரவதை அனுபவிக்கும் கொடூரம் தொடர்கிறது. ஆகையால் புனிதம் போற்றும் மனிதர்கள் நாளை (11ம் தேதி) காலை 8 மணிக்கு வேலூர் மத்திய சிறை முன்பு ஒன்று கூடி சென்னை தலைமைச் செயலகம் வரை நடக்கவிருக்கும் மோட்டார் சைக்கிள் பயணத்தில் கலந்து கொண்டு நம் உறவுகளின் கால் நூற்றாண்டு தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக முதல்வர் இரண்டு முறை அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறார். அதனை காலம் தாழ்த்தாது மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

7 பேர் விடுதலையை தடுக்க நினைப்பவர்களுக்கும் மத்திய அரசுக்கும் நம் ஒட்டு மொத்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணியாக ஆயிரக்கணக்கானவர் ஒன்று கூடுவோம். 7 பேரையும் விடுதலை பெற்ற மனிதர்களாக நம் தமிழ் மண்ணில் வாழ வைப்போம் என்று கூறியுள்ளார் கவுதமன்.

English summary
Tamil film Directior Gowthaman has urged the people to attend the motorcycle rally tomorrow which is slated for tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil