»   »  செல்வா கொலை வழக்கில் திருப்பம்

செல்வா கொலை வழக்கில் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னையில் கொலை செய்யப்பட்ட புதுமுக இயக்குநர் செல்வா கொலையில் திரையுலகினர் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளதால் இந்த கொலை வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் தனியாக அறை எடுத்து வசித்து வந்தவர் செல்வா. இரு படங்களை இயக்கி வந்தார் செல்வா. அவருடன் துணை நடிகையான சங்கீதாவும் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் திடீரென கொலை செய்யப்பட்டார் செல்வா. இதைத் தொடர்ந்து அவருடன் முதல் நாள் இரவில் தங்கியிருந்த சங்கீதாவைப் போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சங்கீதா, தான் கொலை செய்யவில்லை எனவும், தன்னை போலீஸார் மிரட்டி பொய்யான வாக்குமூலம் வாங்கியதாக பரபரப்புத் தகவல்களை வெளியிட்டார்.

இந்த நிலையில், தனது கணவர் கொலையில் பலருக்கும் தொடர்பு உள்ளதாக அவரது மனைவி மைதிலி பரபரப்பு தகவலை வெளியிட்டார். தயாரிப்பாளர் நடராஜன் என்பவரின் பெயரை அவர் முக்கியமாக குறிப்பிட்டார்.

தனது கணவர் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அவரிடதயாரிப்பாளர் நடராஜனுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் உள்ளது எனவும் கூறினார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என மைதிலி டிஜிபி முகர்ஜியிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணைய முடுக்கி விட்டனர். இந்த வழக்கில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் திரையுலகப் பிரமுகர்கள் சிலருக்கும் இந்த கொலையில் சம்பந்தம் இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 4 பேரிடம் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. நடராஜனுக்கும், செல்வாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதில் இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து விசாரணையை விரிவுபடுத்தி பலரையும் பிடித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil