அட...சூப்பர் தகவலா இருக்கே....ஏ.ஆர்.முருகதாஸ் இப்படி ஒரு படத்தை இயக்குகிறாரா ?
சென்னை : டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து யாரை இயக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், ஏ.ஆர்.முருகதாசின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Recommended Video
அஜித் நடித்த தீனா படத்தை இயக்கி கோலிவுட்டில் டைரக்டராக அடியெடுத்து வைத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து பல ஹிட் படங்களை இயக்கினார். விஜய், விஜயகாந்த் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கி உள்ளார்.

கவனத்தை ஈர்க்கும் முருகதாஸ்
பொதுவாக ஏ.ஆர்.முருகதாசின் படங்களில் ஏதாவது ஒரு சோஷியல் மெசேஜ் சொல்லி இருப்பார். ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை பற்றி பேசுவதாக தான் படத்தின் கதையை அமைப்பார். அதனால் இவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு தனி ஈர்ப்பு ஏற்படும். அப்படிப்பட்ட திறமையான டைரக்டர் என மிக குறுகிய காலத்திலேயே பெயர் எடுத்தவர்.

பிரச்சனையான தர்பார்
முருகதாஸ் கடைசியாக 2020 ம் ஆண்டு ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கினார். போதைப் பொருட்களை ஒழிக்க எடுக்கும் முயற்சிகளில் ஒரு நேர்மையான போலீஸ் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை காட்டி இருப்பார். இந்த படத்தில் ரஜினி வயதான போலீஸ் ரோலில் நடித்திருந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் முருகதாஸ் பல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

விக்ரமை இயக்க போகிறாரா
இந்நிலையில் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் படம் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதுவும் விக்ரமை வைத்து படம் இயக்க போவதாகவுமக, இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

அட செம தகவலாக இருக்கே
இதனால் ஏ.ஆர்.முருகதாஸ், விக்ரமை இயக்க தயாராகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், லேட்டஸ்ட் தகவலாக ஏ.ஆர்.முருகதாஸ் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. ஓம் பிரகாஷ் பட் தயாரிக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் ஏற்கனவே துவங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருகிறதாம். இதை பான் இந்தியன் லெவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனராம்.

ரிலீஸ் வரை முடிவு பண்ணிட்டாங்க
ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை போலவே பிரம்மாண்டமாக இந்த அனிமேஷன் படத்தை எடுத்து வருகிறார்களாம். இந்த படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ள படம் என்றாலும் தியேட்டரில் பார்க்கும் அளவிற்கு மிரட்டலாக, பிரம்மாண்டத்தை கொண்டு வர போகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











