»   »  'அன்பே வா' புகழ் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மரணம்

'அன்பே வா' புகழ் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவரான ஏ.சி.திருலோகச்சந்தர் (86) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

கடந்த ஜூன் 11 ம் தேதி தனது 86 வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஏ.சி.திருலோகச்சந்தர், 4 தினங்களுக்குள் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Director AC Thirulogachander passes away

1962ம் ஆண்டு வீரத் திருமகன் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், இந்தி என் 2 மொழிகளிலும் சுமார் 40க்கும் அதிகமான படங்களை இயக்கியிருக்கிறார்.

எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'அன்பே வா' சிவாஜி கணேசனை நடித்த 'தெய்வமகன்', 'பாரதவிலாஸ்' மற்றும் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்' போன்ற படங்கள் இவரின் பெயரை என்றென்றும் தமிழ் சினிமாவில் நிலைபெறச் செய்திருக்கும்.

English summary
Legendary director AC Thirulogachander(86) Today passed away.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil