Don't Miss!
- Automobiles
"மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு..." என ஓலாவை ஓரங்கட்டப் போகும் ஏத்தர்... ஒரே ஆண்டில் 330 சதவீத வளர்ச்சியா!
- News
எல்லா பக்கமும் பிரஷர்.. 4 ஆப்ஷன் இருக்கு.. டெல்லிக்கு பிளைட் ஏறிய அண்ணாமலை.. இன்று ரொம்ப முக்கியம்!
- Sports
ஓ இதுதான் ட்ரிப்பிளா திருப்பி குடுக்குறதா? சோதித்து பார்த்த நியூசி,.. சூர்யகுமார் தரமான பதிலடி!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Technology
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சரியா ஒரு வருஷம் ஆச்சு... கவலைகளை இப்படித்தான் மறக்கிறேன்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
சென்னை : நட்சத்திர தம்பதிகளாக இருந்த ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிந்து ஓராண்டாகி உள்ளது. ஐஸ்வர்யா தனது மனக்கவலைகளை உடற்பயிற்சி, புத்தக வாசிப்பு மூலம் கடந்து வந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் தனுஷூம் 2004ம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
ஐஸ்வர்யாவும் தனுஷூம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு ஜனவரி 17ந் தேதி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.
அர்ஜுன்
தாஸை
காதலிக்கிறாரா
ஐஸ்வர்யா
லக்ஷ்மி?
அவரே
சொன்ன
ஹாட்
தகவல்..
என்ன
இப்படி
சொல்லிட்டாரு!

ஐஸ்வர்யா - தனுஷ்
அந்த அறிக்கையில், நண்பர்களாகவும், தம்பதியாகவும், பெற்றோர்களாகவும், ஒருவருக்கொருவர் நலம் விரும்பிகளாகவும் 18 வருடங்கள் இணைந்திருத்தோம். எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி, புரிதல், சரிப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றியமைத்தல் என இருந்தோம். இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம். எங்களை புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவுசெய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவையும் மதியுங்கள் என்று இருவரும் அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர்.

பலன் அளிக்கவில்லை
இவர்களின் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் இவர்கள் பிரிவு தற்காலிகமானது தான் என்று சொல்லப்பட்டது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தாரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், எதுவும் பலன் அளிக்காமல் போனது.

மன அழுத்தத்தில்
இதனால், ஆரம்பத்தில் மன உளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐஸ்வர்யா தனுஷூடன் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக மாறன் படப்பிடிப்பு நடந்த போது அவர் தங்கிய அதே ஓட்டலியே ஐஸ்வர்யாவும் தங்கினார். ஆனால், அப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

குழந்தைகளுக்காக
தனுஷின் பிறந்தநாளில் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் நடக்காமல் போனது. யாத்ரா மற்றும் லிங்காவிற்கான இருவரும் விவாகரத்து செய்யாமல் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் இருக்கின்றனர். இருந்தாலும், அம்மா, அப்பா பிரிந்து இருப்பது குழந்தைகளுக்கு நிச்சயம் பெரிய வலியாகவே இருக்கும்.

படப்பிடிப்பில்
மகளை நினைத்து வருத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் தற்போது ஜெயிலர் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல ஐஸ்வர்யா, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.

கவலையை மறக்கும் தி சீக்ரெட்
இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் பிரிந்து ஓராண்டாகி உள்ளது. ஆரம்பத்தில் மன அழுத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்தும், புத்தகம் வாசித்தும் தனது கவலையை மறந்துள்ளார். 10 ஆண்டுகளாக தான் தொடர்ந்து வரும் புத்தகம் படிப்பதை இன்னும் நிறுத்தவில்லை, சிறுவயதில் இருந்தே வாசிப்பு என்பது என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. தி சீக்ரெட் என்ற புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு காரில் செல்லும் போது கூட படித்தவாறு செல்கிறேன் என்ற பதிவினை பகிர்ந்துள்ளார்.