கோப்ரா படம் எப்போ ரிலீஸ்... டைரக்டர் என்ன சொல்லிருக்கார் பாருங்க
சென்னை : மகான் படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த கோப்ரா படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ரிலீஸ் பற்றிய தகவலை டைரக்டர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வந்த விக்ரமின் மகான் படம் சமீபத்தில் ஓடிடி.,யில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு விக்ரமின் எந்த படமும் ரிலீசாகவில்லை. இதனால் மகான் படம் ஓடிடியில் ரிலீசானாலும், அதையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் விக்ரமின் நடிப்பை பாராட்டை பெற்றது.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் கோப்ரா
இந்நிலையில் அடுத்த படமான கோப்ரா படத்தை அனைவரையும் எதிர்பார்க்க துவங்கி விட்டனர். விக்ரம் படம் என்பதால் மட்டுமல்ல. இதில் விக்ரம் மிக அதிகமான கெட்அப்களில் நடித்துள்ளார் என்பது தான் இந்த படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பதற்கு காரணம். இந்த படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளது என்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஸ்பெஷலாக உள்ளது.

ஷுட்டிங் முடிவை அறிவித்த டைரக்டர்
டி மோட்ரி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள கோப்ரா படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாக போட்டோவுடன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனால் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மூன்று மொழிகளில் ரிலீஸ்
கணித மேதை உள்ளிட்ட பல ரோல்களில் விக்ரம் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருனாளினி ரவி, கே.எஸ்.ரவிக்குமார், பத்மபிரியா, கனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரிலீஸ் பற்றி டைரக்டர் என்ன சொல்றார்
படத்தின் ரிலீஸ் தேதி பற்றி டைரக்டர் அஜய் ஞானமுத்துவிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், எல்லா படமும் ரிலீஸ் ஆகிட்டு இருக்கு. கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி தான் வரல. சீக்கிரம் அடுத்த அனவுன்ஸ்மென்ட் விடுங்க என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், மே 26 ம் தேதி பிளான் செய்திருக்கிறோம். இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது என கூறி உள்ளார். படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடந்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











