அவரைப்பார்த்து ஏன் பயம்? மாணவர்களின் அதிரடியான கேள்விகள்.. தீர்க்கமான பதில் கொடுத்த அமீர்!

சென்னை: பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் இயக்குநரான அமீர் அறிமுகமார். அந்த படத்திற்கு பின் அமீர் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராவும் பலர் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், மாணவர்களின் அதிரடியான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

கேள்வி: இந்த காலத்து ஜென்சி தலைமுறையினரை அரசியல் மூத்த தலைவர்களும், இயக்கவாதிகளும் வழி நடத்த தவறிவிட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: வழிநடத்த முடியாத சூழல் தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். டெக்னாலஜி பெருகி இருக்கும் பொழுது, ஜென்சியை மட்டும் அவர்களால் வழி நடத்த முடியவில்லை என்பது இல்லை 2k கிட்ஸ் செய்யும் 19 கிட்ஸ் களையும் வழி நடத்த முடியவில்லை. இன்றைய தலைமுறையினரிடம், அனைத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கு. தேவை இருப்பது, தேவை இல்லாதது என அனைத்தையும் பார்க்கலாம். ஆனால், தன் மீது ஒரு பிரச்சனை வரும் போதுதான் அதை உணர்வான். தன்னுடைய பண்பாட்டில் கை வைக்கப்பட்டது, கலாச்சாரத்தில் கைவைப்பட்டது என்று ஊடகத்தில் சொல்லப்பட்ட பிறகு தான் அனைவரும் போராட்டத்திற்கு வந்தார்கள். அது போல ஜென்சியும் வருவார்கள்.

Ameer Director

இப்ப நாம பேசும் இந்த உரையாடல் அவர்களுக்கு சேர்த்து தான். அவங்க கேக்குறதுக்கு நேரம் இருக்கா என்பது தான் கேள்வி. தீபாவளிக்கு டிரஸ் எடுக்குற பிரச்சனை இருக்கு, தீபாவளிக்கு வந்த படங்களில் எது முதல் இடத்தை பிடிக்கும், எது ஆயிரம் கோடி அடிக்கும் என்கிற பிரச்சனை இருக்கு, அப்புறம் டிசம்பரில் கிறிஸ்மஸ், அப்புறம் நியூ இயர் கொண்டாடுவோம். அதன் பின் பொங்கல் கொண்டாடனும், பொங்கலுக்கு வேஷ்டி வாங்கணும், நான் தமிழன்டா என்று ஸ்டேட்டஸ் வைக்கணும். அதெல்லாம் முடிவதற்குள் தேர்தல் வந்துவிடும். இந்த சூழ்நிலையும் மாறும் ஒரு கட்டத்தில் அவர்கள் வயதை கடக்கும் போது மாறுவார்கள். அல்லது இதுபோன்ற விவாதங்கள் அவர்களை மாற்றும் என்று நம்புவோம்.

கேள்வி: மக்களை விரும்பும் தலைவர்கள், கொள்கைகளை கொண்ட தலைவர்கள் என் வெளிச்சத்திற்கு வரவில்லை?

பதில்: இன்றைய காலத்தில் பிம்ப அரசியலை நோக்கி ஊடகங்கள் நகர்ந்து விட்டன, ஒரு சம்பவம் நடந்து கிட்டத்தட்ட பல நாட்கள் ஆகிய பிறகும் அதை மையப்படுத்தி தான் அனைத்து ஊடகங்களிலும் விவாதம் நடக்கிறது. குறிப்பாக ஒருவரை மையப்படுத்தி தான் விவாதம் நடக்கிறது இது ஆபத்தானது. அந்த நபர் நல்லவரா? கெட்டவரா? என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால். அந்த நபரை சுற்றியே பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அவர் மேல் இருக்கும் பயம்: தமிழகத்தில் பிஜேபியால் நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்க முடியாது என சொல்வார்கள் தமிழகத்தில் பிஜேபி வரவே முடியாது என சொல்வார்கள். ஆனால், தொடர்ந்து பிஜேபி பிஜேபி என நாம் தினமும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஒருவர் அரசியலில் வரவே மாட்டார் என்றால் அவரைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், வந்து விடுவாரோ என்கின்ற பயம் இருப்பதால்தான் அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். கூட்டம் கூடினால் அவை அனைத்தும் வாக்காக மாறாது என சொல்லிவிட்டு தினமும் அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். நாட்டில் வேறு பிரச்சனைகளே இல்லையா? தினமும் அவரைப் பற்றிய பேசுகிறோம் என்றால் அவரால் ஏதோ நாட்டில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கு. அதை ஊடகங்கள் ஊதிய ஊதிய பெரிசாக்குகின்றன.

இதனால் மக்களை நேசிக்க கூடிய தலைவர்கள், கொள்கைகளைக் கொண்ட தலைவர்கள் அனைவரும் பின்னால் சென்று விடுகிறார்கள். யார் ஊடகத்தில் செல்வாக்காக இருக்கிறார்களே, ஊடகத்தின் மூலமாக யார் செல்வாக்காக இருக்கிறார்களோ அவர்களை முன்னிறுத்துகிறார்கள். இதில் நாம் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிடுகிறோம். 2026ல் எந்த கட்சி இடைகிறது என்பது என் கேள்வி இல்லை மக்கள் வெற்றி அடைவார்களா என்பது தான் என் கேள்வி என அமீர் அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X