»   »  இன்னும் முட்டாளாக்கப்படுகிறேன், என் வலியை விவரிக்க முடியாது: பாபி சிம்ஹா பட இயக்குனர்

இன்னும் முட்டாளாக்கப்படுகிறேன், என் வலியை விவரிக்க முடியாது: பாபி சிம்ஹா பட இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முட்டாள் தின வாழ்த்து கூறி ட்வீட்டிய மெட்ரோ பட இயக்குனர் அனந்த கிருஷ்ணன் தனது வலி குறித்தும் மனம் திறந்துள்ளார்.

பாபி சிம்ஹா, சிரிஷ் உள்ளிட்டோர் நடித்த மெட்ரோ படம் கடந்த ஆண்டு ரிலீஸானது. இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் அனந்த கிருஷ்ணன் ட்விட்டரில் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சென்சார் போர்டு

சென்சார் போர்டு

அனைவருக்கும் முட்டாள் தின வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ள அனந்த கிருஷ்ணன் சென்சார் போர்டு பற்றிய தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

மெட்ரோ

மெட்ரோ

கடந்த ஆண்டு இதே நாளில் மெட்ரோ படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய அனுமதி அளிக்காமல் சென்சார் போர்டால் நான் முட்டாள் ஆக்கப்பட்டேன்.

டிவி

டிவி

மெட்ரோ படத்தை இன்னும் டிவியில் ஒளிபரப்ப சான்றிதழ் அளிக்கப்படாததால் நான் முட்டாளாக்கப்படுகிறேன். இந்த வலியை சொல்லி விவரிக்க முடியாது. ஒன்று சென்சார் போர்டு பாரபட்சமின்றி இருக்க வேண்டும் இல்லை நான் கதை சொல்லும் விதத்தை மாற்ற வேண்டும்.

முடியாது

நான் கதை சொல்லும் விதத்தை மாற்றுவது எப்பொழுதுமே சாத்தியம் இல்லை. அவர்களை விரைவில் சந்திக்கிறேன். உங்களின் ஆதரவு என்னை வலிமையாக்குகிறது என ட்வீட்டியுள்ளார் அனந்த கிருஷ்ணன்.

English summary
Metro movie director Ananda Krishnan tweeted about his indescribable pain while wishing happy fools day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil