'என் இனிய பொன் நிலாவே' பாடலை மறக்க முடியுமா?..மறக்க முடியாத பிரதாப் போத்தன்

சென்னை : நடிகரும் இயக்குநருமான பரதாப் போத்தன் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.

Recommended Video

Prathap pothen Passed Away | திரையுலகினர் இரங்கல் *Kollywood | Filmibeat Tamil

சீவலப்பேரி பாண்டி, மார்த்தாண்டன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் பிரதாப் போத்தன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் பிரதாப் போத்தன்

பிரபல நடிகர் பிரதாப் போத்தன்

பிரபல நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு காதல் கதை, வெற்றிவிழா, சீவலப்பேரி பாண்டி, மார்த்தாண்டன் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இதேபோல தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

 சுந்தர் சி படத்தில் பிரதாப் போத்தன்

சுந்தர் சி படத்தில் பிரதாப் போத்தன்

தொடர்ந்து நடித்துவந்த பிரதாப் போத்தன் நடிப்பில் சமீபத்தில் பொன்மகள் வந்தாள் படம் ரிலீசானது. தற்போது சுந்தர் சியின் காபி வித் காதல் படத்தில் நடித்துள்ளார். இந்திய அளவில நடிப்பால் தனது சிறப்பான ஆளுமையை இவர் வெளிப்படுத்தி வந்தார். இவரது இயல்பான நடிப்பையும் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

ஆக்ரோஷமான நடிப்பையும் வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்களில் காண முடிந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தனுஷின் பொல்லாதவன் படத்தில் அப்பா கேரக்டரில் நடித்திருந்தார். அதில் டென்ஷன் டென்ஷன் என்று இவர் கூறுவது சிறப்பாக அமைந்தது.

மலையாளத்தில் என்ட்ரி

மலையாளத்தில் என்ட்ரி

மலையாள படங்கள் மூலமே தனது என்ட்ரியை கொடுத்திருந்தார் பிரதாப் போத்தன். தகர என்ற படத்திற்காக சிறந்த நடிகர் விருதை இவர் பெற்றுள்ளார். தமிழில் பாலு மகேந்திரா இயக்கத்தில் அழியாத கோலங்கள் படம் மூலமே இவர் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தில் கமல்ஹாசனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

 காலத்தால் அழியாத படங்கள்

காலத்தால் அழியாத படங்கள்

தொடர்ந்து இவரது காலத்தால் அழியாத படங்களாக வறுமையின் நிறம் சிகப்பு, மூடுபனி உள்ளிட்ட படங்கள் சிறப்பாக அமைந்த படங்கள். மூடுபனியில் இவர் ஏற்று நடித்திருந்த சைக்கோ கில்லர் கதாபாத்திரம் தமிழ் திரையுலகில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. இதில் என் இனிய பொன் நிலாவே என்ற பாடல் எவர்கிரீன் ரகம்.

சிறப்பான ஆசிரியர்

சிறப்பான ஆசிரியர்

வறுமையின் நிறம் சிகப்பு, வாழ்வே மாயம் போன்ற படங்களில் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலிப்பார் பிரதாப் போத்தன். இதில் வாழ்வே மாயத்தில் ஸ்ரீதேவியை திருமணமும் செய்து கொள்வார். இதேபோல பன்னீர் புஷ்பங்கள் இவர் நடிப்பில் சிறப்பான படம். சிறுவர்களை அவர்களது வாழ்க்கையை, அவர்களது காதலை முறைப்படுத்தும் டீச்சராக இந்தப் படத்தில் அவர் நடித்திருந்தார்.

சிறப்பாக கைக்கொடுத்த பாடல்கள்

சிறப்பாக கைக்கொடுத்த பாடல்கள்

இந்தப் படத்திலும் பாடல்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. தொடர்ந்து விசு படங்களிலும் இவரை அதிகமாக காண முடிந்தது. இந்தப் படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கட்டிப் போட்டார். தொடர்ந்து தற்போது வரை பிரதாப் போத்தன் இதை சிறப்பாக மெயின்டெயின் செய்து வந்துள்ளார்.

பிரதாப் போத்தன் மறைவு

பிரதாப் போத்தன் மறைவு

காலத்தால் அழியாத தமிழ் சினிமாவின் பல படங்களில் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருந்த பிரதாப் போத்தன் தற்போது தன்னுடைய 69வது வயதில் உயிரிழந்துள்ளார். அவர் மறைந்தாலும் அவருடைய கதாபாத்திரங்கள் அவரது பெருமையை இறுதிவரை நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X