காப்பான் பட வில்லன் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்... அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்!
சென்னை: பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர் என் ஆர் மனோகர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.
Recommended Video
தமிழ் திரையுலகில் இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் வலம் வந்தவர் ஆர் என் ஆர் மனோகர். இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இயக்குநர் ஆர் என் ஆர் மனோகர்
2009-ம் ஆண்டு நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார் நடிகர் ஆர் என் ஆர் மனோகர். இரண்டாவது படமாக வேலூர் மாவட்டம் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கள்ளழகர், தில், தென்னவன், சபரி. வீரம், சலீம், கா, என்னை அறிந்தால், நானும் ரவுடிதான், வேதாளம், ஆண்டவன் கட்டளை, அச்சம் என்பது மடமையாடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வில்லன் கதாப்பாத்திரம்
மேலும் தீரன் அதிகாரம் ஒன்று, கவன், விசுவாசம், காஞ்சனா 3, அயோக்யா, காப்பான், கைதி , பூமி , டெடி உட்பட படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டெடி ஆகும். சூர்யா, கார்த்தி, விஷால் என முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஆர் என் ஆர் மனோகர்.

திமுக எம்பியின் சகோதரர்
இந்நிலையில் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் ஆர் என் ஆர் மனோகர் இன்று காலமானார். ஆர் என் ஆர் மனோகர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் ஆவார். அவரது திடீர் மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓராண்டு முன்பு மகன் மரணம்
திரைத்துறை பிரபலங்கள் பலரும் ஆர் என் ஆர் மனோகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்புதான் அவரது மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











