twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படையப்பா ரிலீஸ் நேரம்.. தியேட்டர் வாசலில் ஏக்கத்துடன் நின்ற சியான் விக்ரம்.. ஆறுதல் சொன்ன அமீர்!

    |

    சென்னை : நடிகர் விக்ரமிற்கு சிறப்பான அறிமுகத்தையும் ஏற்றத்தையும் கொடுத்த படம் என்றால் அது சேதுதான்.

    முன்னதாக ஒருசில காதல் படங்களில் நடித்திருந்த விக்ரமிற்கு அந்தப் படங்கள் சிறப்பாக அமையவில்லை.

    பாலா இயக்கத்தில் உருவான சேது படத்தில் இருவேறு கெட்டப்புகளில் மிரட்டியிருந்தார் விக்ரம்.

    கமலின் விக்ரம் பட பாணியில் வாரிசு ப்ரோமோஷன்… துபாய் பறக்க விஜய் முடிவுகமலின் விக்ரம் பட பாணியில் வாரிசு ப்ரோமோஷன்… துபாய் பறக்க விஜய் முடிவு

     வெற்றிக்கான 9 ஆண்டு போராட்டம்

    வெற்றிக்கான 9 ஆண்டு போராட்டம்

    நடிகர் விக்ரமிற்கு அறிமுக படமாக கடந்த 1990ம் ஆண்டில் வெளியான என் காதல் கண்மணி படம் அமைந்தது. ஆனால் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது சேது படம். இந்த இரு படங்களுக்கும் இடையில் 9 ஆண்டுகள் இடைவெளி இருந்தது. இந்த 9 ஆண்டுகளை கடக்க விக்ரம் மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது.

    விக்ரமின் கேரியர் பெஸ்ட் படம்

    விக்ரமின் கேரியர் பெஸ்ட் படம்

    இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைத்த கேரக்டர்களை செய்தார். டப்பிங்கிலும் ஈடுபட்டார். ஆனால் சேது படத்திற்கு பிறகு இவருடைய கேரியரே மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது. தொடர்ந்து ஜெமினி, தூள், சாமி என தன்னுடைய வெற்றிப்பாதையை அமைத்துக் கொண்டார். தன்னுடைய மகன் ஹீரோவாக ஆன போதிலும் இப்போதும் தன்னை, தன்னுடைய கேரக்டர்களை மெருகேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    ஆதித்த கரிகாலனாக மிரட்டல்

    ஆதித்த கரிகாலனாக மிரட்டல்

    தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளார். இவரது கேரக்டர் தோன்றும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அடுத்ததாக கேஜிஎப் மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகவுள்ள சியான்61 படத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் கடப்பாவில் நாளை முதல் துவங்கவுள்ளது.

    விக்ரம் குறித்து சசிகுமார் சுவாரஸ்யம்

    விக்ரம் குறித்து சசிகுமார் சுவாரஸ்யம்

    முன்னதாக சேது படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னதாக காலகட்டத்தில் இவரது பயணம் மிகவும் கரடுமுடராக இருந்துள்ளது. இதுகுறித்து தற்போது நடிகரும் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான சசிகுமார் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் தனது சமீபத்திய பேட்டியில் தியேட்டருக்கு வெளியே இருந்து விக்ரம், அமீர் மற்றும் தன்னுடைய பயணம் எப்படி தியேட்டருக்கு உள்ளே சென்றது என்பது குறித்து விவரித்துள்ளார்.

    படையப்பா நைட் ஷோ

    படையப்பா நைட் ஷோ

    தானும் அமீரும் படையப்பா படத்தின் நைட் ஷோவிற்கு சென்றபோது தானும் வருவதாக விக்ரம் தங்களுடன் இணைந்ததாகவும் மூவரும் இணைந்து உதயம் திரையரங்கில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக்கொண்டு படத்தை பார்த்ததாகவும் விக்ரம் கேப் போட்டுக் கொண்டு படத்தை தங்களுடன் இணைந்து பார்த்ததாகவும் சசிக்குமார் கூறியுள்ளார்.

    ஊக்கமாக மாறிய விக்ரமின் ஏக்கம்

    ஊக்கமாக மாறிய விக்ரமின் ஏக்கம்

    அப்போது நடிகர்களுக்கான ஸ்பெஷல் ஷோவை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து பலர் கார்களில் கிளம்பி போனதாகவும் அதை மூவரும் கேட்டிற்கு அருகில் இருந்தபடி பார்த்ததாகவும் சசிக்குமார் தெரிவித்துள்ளார். இதை விக்ரம் ஃபீலுடன் பார்த்ததாகவும் அப்போது, அமீர், அடுத்த வருடம் சேது படம் ரிலீசானவுடன் விக்ரமும் திரையரங்கின் உள்ளே இருந்து வெளியில் வருவார் என்று நம்பிக்கை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    திரையரங்கிற்கு உள்ளே

    திரையரங்கிற்கு உள்ளே

    அமீரின் நம்பக்கை பொய்யாகாத வகையில், அடுத்த ஆண்டில் சேது படம் வெளியாகி சிறப்பாக அமைந்த நிலையில் விக்ரம் அந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோவில் பங்கேற்று திரையரங்கிலிருந்து வெளியில் வந்ததாகவும் அப்போது தானும் அமீரும் வாயிலில் நின்றுக் கொண்டிருந்ததாகவும் சசிக்குமார் மேலும் தெரிவித்தார்.

    முன்னேறிய மூவர் கூட்டணி

    முன்னேறிய மூவர் கூட்டணி

    இதையடுத்து தானும் அமீரும் கூட மேலே வந்துவிட்டதை குறிப்பிட்ட சசிக்குமார், நம்பிக்கையுடன் வாய்ப்பிற்காக காத்திருந்த தாங்கள் மூவரும் தற்போது முன்னேறியுள்ளதை நினைத்து பார்க்கும்போது உணர்ச்சிகரமாக உள்ளதாகவும் சசிக்குமார் தனது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

    இயக்குநர் -நடிகராக சாதனை

    இயக்குநர் -நடிகராக சாதனை

    கடந்த 2008ம் ஆண்டில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கியுள்ள சசிக்குமார், அந்தப் படத்தின் பிரதான கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் சசிக்குமார், டைரக்டர் அமீரின் பருத்திவீரன் உள்ளிட்ட படங்களுக்கும் உதவி செய்துள்ளார்.

    English summary
    Actor Sasikumar hails about Vikram and his movie Sethu in his recent interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X