Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தொடர்ந்து தெலுங்கு நடிகரை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்!
சென்னை: சூர்யாவின் நடிப்பில் தமிழில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற கஜினி படத்தை இந்தியில் இயக்கியதன் மூலம் பான் இந்தியா இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அடுத்ததாக மெகா கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்
ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி விஞ்ஞானியாக நடிக்கும் புதிய படம்... பூஜையுடன் துவங்கியது!

பான் இந்தியா இயக்குனராக
நடிகர் விஜய்யுடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்றி ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இப்பொழுது பான் இந்தியா இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளார். அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது அதைத் தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா இவருக்கு மேலும் நற்பெயரை பெற்றுத் தந்தது.

முற்றிலும் வேறு ஸ்டைலில்
விஜய் பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்றுவரை துப்பாக்கி விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக உள்ளது விஜய்யை முற்றிலும் வேறு ஸ்டைலில் துப்பாக்கி படத்தில் காட்டி இருப்பார் முருகதாஸ். இந்த படம் விஜய்க்கு 100 கோடி பாக்ஸ் ஆபீஸுக்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்தது. துப்பாக்கி கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய், ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி கத்தி, சர்க்கார் என தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீவிர பேச்சுவார்த்தை
பெரும் எதிர்பார்ப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ஏஆர் முருகதாஸுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்த படம் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. இந்த நிலையை அடுத்ததாக விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைக்க தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மற்றுமொரு சுவாரசியத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது

ராம் உடன் கூட்டணி
சமீபகாலமாகவே தமிழ் இயக்குநர்கள் பலரும் தெலுங்கு திரைப்படத் துறையை நோக்கி படையெடுக்கின்றனர். அந்த வகையில் லிங்குசாமி மற்றும் ஷங்கர் என முன்னணி இயக்குனர்கள் பலர் தெலுங்கில் நேரடி படத்தை இயக்கி வருகின்றனர் . இவர்களைத் தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராமுடன் இணைய உள்ளார் . ஏற்கனவே லிங்குசாமி ராம் ஹீரோவாக நடிக்கும் தி வாரியர் என்ற படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். அதைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் நடிகர் ராம் உடன் இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளாராம் . தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.