twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்நியன் படத்தின் உதவி இயக்குநராக ஷங்கர் சாருக்கு ஆதரவாக நிற்பேன்.. பிரபல இயக்குநர் தடாலடி!

    |

    சென்னை: அந்நியன் படத்தின் உதவி இயக்குநராக அப்படத்தின் கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கருக்கு ஆதரவாக இருப்பதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    'Anniyan கதை என்னுடையது.. யாரும் குறுக்கிட முடியாது'- Director Shankar | Tamil Filmibeat

    தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் ஷங்கர். ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

    அந்நியன் கதை என்னுடையது.. யாரும் குறுக்கிட முடியாது: பிரபல தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கர் பதிலடி!அந்நியன் கதை என்னுடையது.. யாரும் குறுக்கிட முடியாது: பிரபல தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கர் பதிலடி!

    இந்நிலையில் தனது இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார்.

    ஷங்கருக்கு நோட்டீஸ்

    ஷங்கருக்கு நோட்டீஸ்

    இந்நிலையில் அந்நியன் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன், அந்நியன் கதையை சுஜாதாவிடம் இருந்து தான் வாங்கிவிட்டதாகவும், தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்நியன் படத்தை ரீமேக் செய்வது சட்டவிரோதம் என்று கூறியும் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    என்னுடைய கதை

    என்னுடைய கதை

    அதற்கு இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில், அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது.

    படைப்பை எழுதியவன்

    படைப்பை எழுதியவன்

    படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை.
    ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது என்று கூறியிருந்தார்.

    இயக்குநர் அறிவழகன்

    இந்நிலையில் அந்நியன் படத்தில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் அறிவழகன், அந்நியன் கதை விவகாரத்தில் தான் ஷங்கர் சாருகுகு ஆதரவாக இருப்பதாக டிவிட்டியுள்ளார். #ISupportDirectorShankar என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ள அறிவழகன், இயக்குநர் ஷங்கர் வெளியிட்ட அறிக்கையையும் ஷேர் செய்துள்ளார்.

    பார்டர் பட இயக்குநர்

    பார்டர் பட இயக்குநர்

    இயக்குநர் அறிவழகன், ஈரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கியுள்ள அறிவழகன், தற்போது மீண்டும் அருண் விஜய்யை வைத்து பார்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    English summary
    Director Arivazhagan shows his support to Director Shankar in Anniyan Story issue. He has tweeted that As an AD of #Anniyan, I stand withShankar Sir.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X