சக்தித் திருமகன் திருட்டு கதையா? மனசு வலிக்கிது.. இயக்குநர் விளக்கம்!

சென்னை: அருவி, வாழ் படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த இயக்குநர் அருண் பிரபு, இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் 'சக்தி திருமகன்'. விஜய் ஆண்டனியே இப்படத்தை தயாரித்தார். இதில் வாகை சந்திரசேகம், காதல் ஓவியம் கண்ணன், திர்பதி ரவீந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தியேட்டரில் கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், சுபாஷ் சுந்தர் என்பவர் 'சக்தித் திருமகன்' படத்தின் கதை தன்னுடையது என கருத்து தெரிவித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சுபாஷ் சுந்தர் முகநூல் பக்கத்தில், 'சக்தி திருமகன் என்னுடைய கதை அதை திருடிவிட்டார்கள். எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவன் இந்தியாவே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். அந்த கதாபாத்திரத்தை வில்லனாக மாதவனை உருவகம் செய்து கதையை எழுதியிருந்தேன். ஹீரோவுக்கு வில்லன் எல்லாம் சொல்லிக் கொடுக்க ஒரு கட்டத்தில் ஹீரோ வில்லனுக்கு எதிராக திரும்புவான். 3 வருடங்களுக்கு முன்பு காப்பிரைட்ஸ் உரிமையை வாங்கிய கதைதான் 'தலைவன்'. அதைத்தான் தற்போது சக்தி திருமகனாக எடுத்திருக்கிறார்கள்.

Sakthi Thirumagan Arun Prabhu Vijay antony
Photo Credit:

கதை திருட்டு: இந்தப் படத்தின் கதையை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பினேன். அருண் பிரபு இயக்கிய அருவி படத்தை அந்த நிறுவனம்தான் தயாரித்தது. புதிய இயக்குனர்கள் அனுப்பும் கதைகளை வாங்கி அதை வேறு வடிவமாக மாற்றி யாரிடம் கொடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதை நான் சும்மா விட மாட்டேன் பதிவிட்டு இருந்தார். மேலும், அந்த பதிவில் கதையை பதிவு செய்ததற்கான ஆவணத்தையும் பதிவிட்டு படத்தை இப்போதுதான் ஓடிடியில் பார்த்தேன் சுபாஷ் சுந்தர் கூறியுள்ளார்.

இயக்குநர் விளக்கம்: சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இயக்குநர் அருண் பிரபு வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''பல வருட உழைப்புக்கு பின், இதுபோன்ற அவதூறுகள் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. முதலில் செய்தியைக் கேட்டதும், இது வெறும் ஆன்லைன் டிரோல் என நினைத்து விட்டுவிட நினைத்தேன். ஆனாலும் பலரும் என்னிடம் விளக்கம் கேட்டதைத் தொடர்ந்து தெளிவுபடுத்தவே இந்த பதிவு. இது மிகவும் தவறான அவதூறு. நான் உழைத்து எழுதிய கதையே இது என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: arun prabhu vijay antony
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X