»   »  'சேதுபதி' அருண்குமார் இயக்கத்தில் விஷால்?

'சேதுபதி' அருண்குமார் இயக்கத்தில் விஷால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையை எடுக்கப்போவதாக இயக்குநர் அருண்குமார் தெரிவித்திருக்கிறார்.

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' என 2 படங்களிலும் விஜய் சேதுபதியை இயக்கிய அருண்குமார் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

Director Arunkumar Next movie Details

அறிமுகப்படமான 'பண்ணையாரும் பத்மினியும்' எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. எனினும் அருண்குமார்-விஜய் சேதுபதி கூட்டணியில் 2 வது முறையாக வெளியான 'சேதுபதி' அருண்குமாருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இதனால் அருண்குமாரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. மேலும் விஜய் சேதுபதியைத் தொடர்ந்து விஷாலை இவர் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவல்களை தற்போது அருண்குமார் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் ''என்னுடைய அடுத்த படம் அதிரடி கலந்த ஆக்ஷன் என்ற ரீதியில் இருக்கும்.

இந்தப் படத்தின் திரைக்கதை எழுதும் பணி தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது.இந்த கதையின் நாயகனாக இதுவரை நான் யாரையும் தேர்வு செய்யவில்லை.

தற்போது இப்படம் குறித்த தகவல்களை என்னால் வெளியிடமுடியாது இப்போதைக்கு இதுவொரு ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பு கலந்த கதை என்பது மட்டும் உறுதி.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்" என்று கூறியிருக்கிறார். 3 வது முறையாக விஜய் சேதுபதி-அருண்குமார் இப்படத்தில் இணைவார்களா? இல்லை வேறு ஹீரோவை அருண்குமார் இயக்கப் போகிறாரா? என்பது தெரியவில்லை.

English summary
'Sethupathi' Fame Arun Kumar Now Revealed his Next Movie Details.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil