இந்த ஆண்டு எனக்கு 2 ரிலீஸ்.. திடீரென தேதியுடன் அப்படியொரு அறிவிப்பை வெளியிட்ட அட்லி.. செம!

சென்னை: இயக்குநர் அட்லி இந்த புத்தாண்டை ரொம்பவே சூப்பராக வரவேற்க உள்ளார். இந்த ஆண்டு அவருக்கு 2 சூப்பர் ரிலீஸ் காத்துக் கொண்டிருப்பதாக அறிவித்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார் அட்லி.

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அட்லி ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என 3 படங்களை இயக்கி அசத்தினார்.

ஷாருக்கானின் ஜவான்

ஷாருக்கானின் ஜவான்

தமிழில் அட்லி இயக்கிய 4 படங்களும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், அடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு அமைந்தது. பிகில் படத்தை முடித்து விட்டு ஜவான் படத்தை இயக்க ஆரம்பித்த அட்லி ஒரு வழியாக அந்த படம் இந்த ஆண்டு வெளியாக போகிறது என்கிற ஹாட் அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

லக்கி சார்ம் நயன்

லக்கி சார்ம் நயன்

இயக்குநர் அட்லி டார்லிங் என்றே அழைக்கும் அளவுக்கு நயன்தாரா அவருக்கு ரொம்பவே லக்கி சார்ம் என்பதை அவரே பல மேடைகளில் சொல்லி உள்ளார். ராஜா ராணி படத்தையே நயன்தாராவை அழைத்து வந்து அவர் எடுத்து தான் ஹிட் கொடுத்தார். ஷாருக்கானின் ஜவான் படம் மூலமாக நயன்தாராவை பாலிவுட்டில் அறிமுகம் செய்ய உள்ளார் அட்லி.

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

ஷாருக்கான் கடந்த 4 ஆண்டுகளாக ஹீரோவாக நடிக்காமல் வெறும் கேமியோவாக மட்டும் தலை காட்டி சென்ற நிலையில், அவர் நடிப்பில் உருவாகி உள்ள பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே அந்த படத்திற்கான நெகட்டிவ் ப்ரமோஷன்கள் பெஷாராம் ரங் பாடல் மூலம் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் அட்லி தற்போது அறிவித்துள்ளார்.

2 ரிலீஸ்

2 ரிலீஸ்

புத்தாண்டு 2023க்கு ரசிகர்களுக்கு சற்று முன் வாழ்த்துக் கூறிய இயக்குநர் அட்லி இந்த ஆண்டு தனக்கு ரெண்டு ரிலீஸ் என அறிவித்து தனது குழந்தை வரும் பிப்ரவரி மாதம் பிறக்க உள்ளதாகவும் ஜவான் திரைப்படம் வரும் இந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி வெளியாகும் என ஹாட் அப்டேட்டை கொடுத்து ஷாருக்கான் ரசிகர்களையும் ஹாப்பி ஆக்கி உள்ளார்.

400 கோடி படம்

400 கோடி படம்

ஷாருக்கானின் பாலிவுட் படத்தை முடித்த நிலையில், மீண்டும் இயக்குநர் அட்லி விஜய்யுடன் இணைந்து தளபதி 68 படத்தை இந்த ஆண்டு இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் 400 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் பேனரில் அந்த படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்பா அட்லிக்கு வாழ்த்து

அப்பா அட்லிக்கு வாழ்த்து

வரும் பிப்ரவரி மாதம் அப்பாவாகப் போகும் இயக்குநர் அட்லிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குங்கள் என அட்லிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிண்றனர். சமீபத்தில் தனது மனைவி பிரியாவுக்கு அட்லி வளைகாப்பு விழா நடத்திய நிலையில் நடிகர் விஜய் கலந்து கொண்டது குறிபிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X