Don't Miss!
- News
"கேக் வாக்".. ஓபிஎஸ் சொன்ன வார்த்தையால்.. திக்கு முக்காடி போன திமுக.. காங்கிரசும் குஷியாம்.. போச்சே!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
என்னது நாங்க கர்ப்பமா.. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பா ஆகப் போகும் சந்தோஷத்தில் குழம்பிட்டாரா அட்லி?
சென்னை: இயக்குநர் அட்லியின் மனைவி பிரியா அட்லி கர்ப்பமாக உள்ள சூப்பரான செய்தியை அட்லி தற்போது புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அட்லி நடிகர் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வரும் அட்லி தற்போது அப்பா ஆகப் போகிறேன் என்கிற சந்தோஷத்தை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்துள்ளார்.
அந்தகாரம் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம்...அட்லியின் முதல் தயாரிப்பே வெற்றி!

அப்பா ஆகப்போகும் அட்லி
இயக்குநர் அட்லி தனது மனைவி பிரியா அட்லி கர்ப்பமாக உள்ள ஹாப்பி நியூஸை போட்டோக்களை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் அறிவித்துள்ளார். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் கொடுத்த வாய்ப்பு
அட்லி இயக்கத்தில் வெளியான முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. நண்பன் படத்திலேயே துணை இயக்குநராக அவரது வொர்க்கை பார்த்து வியந்து போன விஜய் தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். தெறி பட்ம் தாறுமாறாக ஓடிய நிலையில், தொடர்ந்து மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது.

ஷாருக்கான் படம்
விஜய்க்கு பிறகு அட்லி யாரை இயக்கப் போகிறார் என கோலிவுட்டே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், பேகை தூக்கிக் கொண்டு பாலிவுட்டுக்கு புறப்பட்ட அட்லி ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார்.

8 ஆண்டுகள் ஆகிறது
கடந்த 2014ம் ஆண்டு இயக்குநர் அட்லிக்கும் நடிகை பிரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அட்லி மற்றும் பிரியா அட்லி இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அடிக்கடி இருவரும் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்டாவது வழக்கம்.

பிரியா அட்லி கர்ப்பம்
இந்நிலையில், பிரியா அட்லி கர்ப்பமாக உள்ள சந்தோஷ அறிவிப்பை இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோக்களை போட்டு அறிவித்துள்ளார். சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இயக்குநர் அட்லி அப்பா ஆகப் போவதை அறிந்து அவரை வாழ்த்தி வருகின்றனர். 2023ல் ஜவான் மற்றும் அட்லியின் வாரிசு என இரண்டு ரிலீஸ்கள் காத்திருக்கின்றன.

நாங்க கர்ப்பமா
அந்த அறிவிப்பில் "Happy to announce that we are pregnant need all your blessing and love" என அட்லி சொல்லியிருப்பதை பார்த்த ரசிகர்கள் அவசரத்தில் we போட்டுட்டீங்களா என கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர். அட்லி ரசிகர்கள் வயிற்றில் கருவை பிரியா சுமக்கிறார்.. நெஞ்சில் அட்லி சுமக்கிறார் அதைத்தான் இயக்குநர் அப்படி சொல்லி உள்ளார் என விளக்கம் கொடுத்து வருகின்றனர்.