twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "எங்களை ஏன் லோக்கல்ன்னு சொல்லனும்"... கொந்தளிக்கும் குப்பத்து ராஜா இயக்குனர்!

    குப்பத்து ராஜா படத்தை லோக்கல் என அழைக்க வேண்டாம் என அப்படத்தின் இயக்குனர் பாபா பாஸ்கர் கூறியுள்ளார்.

    |

    Recommended Video

    Kuppathu Raja Movie: எங்களை ஏன் லோக்கல்னு சொல்லணும்.. குப்பத்து ராஜா இயக்குனர்- வீடியோ

    சென்னை: லோக்கல் என்ற வார்த்தையை தான் ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார் குப்பத்து ராஜா திரைப்படத்தின் இயக்குனர் பாபா பாஸ்கர்.

    ஜி.வி.பிரகாஷ், பாலக் லால்வானி, பார்த்திபன், யோகி பாபு மற்றும் பூனம் பஜ்வா நடித்துள்ள படம் குப்பத்து ராஜா. எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை, பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகிறது.

    குப்பத்து ராஜா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை பார்த்த பலரும், படம் லோக்கலாக இருக்கிறது என கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பாபா பாஸ்கர், லோக்கல் என்ற வார்த்தையை தான் ஏற்கவில்லை என்றார்.

    Dharmaprabhu Teaser: Dharmaprabhu Teaser: "அம்மா, சின்னம்மா, ஐயா, சின்னய்யா,"... செம கலாய் கலாய்க்கும் யோகி பாபு!

    லோக்கல் இல்லை நேட்டிவிட்டி

    லோக்கல் இல்லை நேட்டிவிட்டி

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "உண்மையில் நான் 'லோக்கல்' என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை 'நேட்டிவிட்டி' என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மையில் சென்னை மாநகரத்தின் இயற்கையான கூறுகள் தான்.

    குப்பத்து ராஜா டிரெய்லர்

    குப்பத்து ராஜா டிரெய்லர்

    குப்பத்து ராஜா படத்தின் ட்ரைலர் யூடியூபில் லட்சக்கணக்கான ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த படம் ஒரு தனித்துவமான கதையை கொண்டுள்ளதும் தெளிவாகிறது.

    வில்லனாக பார்த்திபன்

    வில்லனாக பார்த்திபன்

    'குப்பத்து ராஜா' தலைப்புக்கு ஏற்றவாறு, டிரைலரில் வரும் சம்பவங்களை தொடர்புபடுத்தி பார்த்தால், இது குப்பத்துக்கு 'ராஜா' ஆக விரும்பும் இருவருக்கு இடையில் நடக்கும் மோதல் என்ற பார்வையை அளித்துள்ளது. எனவே பார்த்திபன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் சண்டை போடுகிறாரா? என பல கேள்விகள் உள்ளன. அதில் எதையாவது ஒன்றை சொன்னாலும் கதையை சொல்ல வேண்டிவரும்.

    ஆழமான கதை

    ஆழமான கதை

    டிரைலரில் நாம் பார்த்ததை விட ஆழமான கதை படத்தில் உள்ளது. கதையுடன் இணைந்து பொழுதுபோக்கு விஷயங்களும் இருக்கும். ஹீரோ மற்றும் வில்லன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், படத்தில் தான் அதை பார்க்க வேண்டும். ஏனெனில் அதில் சில வியக்கதகு தருணங்கள் இருக்கும்" என்றார்.

    English summary
    “Actually I don’t accept the term ‘Local’ and instead would prefer calling it ‘Nativity’. When people around us are so much spellbound over the nativities of village and neighboring states, ‘Slums’ are indeed the native element of Chennai city,” says choreographer turned filmmaker Baba Bhaskar on Kuppathu Raja.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X