Don't Miss!
- News
"அதானி தான் இந்தியாவின் ஸ்டீவ் ஜாப்ஸ்.." சர்ச்சைக்கு மத்தியில் டாப் அதிகாரி விளக்கம்! என்ன சொன்னார்
- Automobiles
இந்த கார் வந்ததுக்கு அப்புறம் யாரும் டூவீலர் வாங்க மாட்டாங்க! இந்தியாவே இதுக்காகதான் தவம் கிடைக்குது!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி ஆண்கள் இந்த ரகசியங்களை தெரியாம கூட மனைவியிடம் சொல்லக்கூடாதாம்... இல்லனா அவ்வளவுதான்...!
- Finance
தங்கம் விலை இன்று எப்படியிருக்கு தெரியுமா.. கூடியிருக்கா குறைஞ்சிருக்கா.. இனி எப்படியிருக்கும்?
- Technology
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
சட்டப்படி மனைவியை விவாகரத்து பெற்றார் டைரக்டர் பாலா
சென்னை : டைரக்டர் பாலா, தனது மனைவியிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து பெற்றுள்ளனர்.
Recommended Video
தமிழ் சினிமாவின் முக்கிய டைரக்டர்களில் ஒருவர் பாலா. வழக்கமான கதைகள், ஹீரோக்களின் மாஸ் இல்லாமல் மிக சாதாரணமான, அதே சமயம் வித்தியாசமான கதைகளை சினிமாவாக எடுத்து வெற்றி பெற்றவர் பாலா. டைரக்டர் பாலா படம் என்றாலே விருது கன்ஃபார்ம் என சொல்லும் அளவிலான படங்களை இயக்குவதில் கை தேர்ந்தவர் பாலா.
கணவருடன் பிரச்சினை.. விவாகரத்து செய்துவிட்டாரா விஜய்டிவி பிரியங்கா? குட்டையை குழப்பிய பிரபலம்!

விருது பட டைரக்டர்
பாலாவின் படங்கள் இதுவரை 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 14 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளன. விருது மட்டுமல்ல பாலாவின் படத்தில் நடித்து விட்டால் அதற்கு பிறகு அந்த நடிகர், நடிகைகளுக்கு சினிமாவில் பல வாய்ப்புக்கள் கிடைத்து, நல்ல எதிர்காலம் இருப்பதும் உறுதியாகி விடும். இதனால் பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பலரும் காத்துக்கிடக்கிறார்கள்.

நடிகர்களை செதுக்கிய பாலா
சேது, நந்தா, பிதாமகன், பரதேசி என பல படங்களை இயக்கினார். விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா என பல நடிகர்களின் நடிப்பு திறமையை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டியவர் பாலா. டைரக்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்ட பாலா, கடைசியாக வர்மா என்ற படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து விசித்திரன் என்ற படத்தை தயாரித்தார்.

மீண்டும் பாலா டைரக்ஷன்
அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பாலா, தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் படத்தை பாலா இயக்க உள்ளார். விரைவில் இந்த படம் துவங்க உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அதுவும் பாலா இயக்க போகும் படத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா-ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்க போவதாக கூறப்படுவதால் எதிர்ப்பு பல மடங்காகி உள்ளது.

விவாகரத்து பெற்றார் பாலா
2004 ம் ஆண்டு டைரக்டர் பாலாவுக்கும் முத்துமலர் என்பவருக்கும் மதுரையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். இதைத் தொடர்ந்து கோர்ட்டில் சட்டப்படி விவாகரத்து பெறும் நடைமுறைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் சமீபத்தில் குடும்ப நல கோர்ட் இவர்களுக்கு சட்டப்படி விவாகரத்து வழங்கி உள்ளது.