»   »  மில்லியன் டாலர் பேபியை விட இறுதிச்சுற்று சிறந்த படம்... பாராட்டித் தள்ளிய பாலா

மில்லியன் டாலர் பேபியை விட இறுதிச்சுற்று சிறந்த படம்... பாராட்டித் தள்ளிய பாலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் சுதா இயக்கத்தில் மாதவன், நாசர், ரித்திகா சிங் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் இறுதிச்சுற்று.

7 வருடங்கள் கழித்து மாதவன் சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் தமிழ், இந்தி என்று 2 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இறுதிச்சுற்றில் மாதவன் நீண்ட தலைமுடி, தாடி வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார்.


கடந்த வாரம் வெளியான இப்படம் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.இந்நிலையில் இயக்குநர் பாலாவும் நான் சுதாவிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று பாராட்டியிருக்கிறார்.


இயக்குநர் பாலா

இயக்குநர் பாலா

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா இறுதிச்சுற்று படத்தைப் பார்த்து சமீபத்தில் வெகுவாக பாராட்டியிருக்கிறார்.அவர் கூறும்போது "இதுவரை நான் பார்த்த விளையாட்டு சம்பந்தமான படங்கள் அனைத்தும் நன்றாக இருந்ததே தவிர என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் குத்துச்சண்டையை பற்றி எதுவும் அறியாத என்னை இந்தப்படம் வெகுவாக பாதித்து விட்டது.
அழுகை வரவைத்தது

அழுகை வரவைத்தது

இதுவரை எந்தப் படத்தையும் பார்த்து நான் அழுததில்லை.ஆனால் இப்படத்தைப் பார்த்த போது பல இடங்களில் என்னையும் அறியாமல் அழுதேன். திரைக்கதை தொடங்கி எடிட்டிங், நடிகர்களின் நடிப்பு, இசை, எல்லாமே அருமையாக இருந்தது.


ஏதாவது

ஏதாவது

படம் எடுக்கும் போது ஏதாவது ஒரு குறை இல்லாமல் இருக்காது.என் படங்களில் நிறைய குறைகள் தெரியும், இப்படத்தில் குறைகளே என் கண்ணில் படவில்லை.இறுதிச்சுற்று அற்புதமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.மொத்த படமுமே என்னை பாதித்துவிட்டது.


இவ்வளவு நல்ல படமா?

இவ்வளவு நல்ல படமா?

தனது சுறுசுறுப்பு, துறுதுறுப்பு எல்லாவற்றையும் அந்தப் பெண்ணுக்குள் திணித்து சுதா நடிக்க வைத்திருக்கிறாள். இதுவரை வெளியான படங்களில் மாதவனின் சிறந்த நடிப்பு என்றால் இந்த படம் தான்.நல்ல படமாக இருக்கும் என நம்பித்தான் வந்தேன், ஆனால் இவ்வளவு நல்ல படமா என்று மலைத்துப் போய்விட்டேன்.
மில்லியன் டாலர் பேபி

மில்லியன் டாலர் பேபி

பொதுவாக நமக்கு ஒரு மொழி கவர்ச்சியும், இனக் கவர்ச்சியுமே உண்டு. மில்லியன் டாலர் பேபி(ஹாலிவுட் குத்துச்சண்டையை பற்றிய படம்) படத்தை விட எனக்கு 'இறுதிச்சுற்று' படம் தான் சிறந்த படமாக தோன்றுகிறது. இயக்குநர் மணி சாருக்கு சுதா இயக்குநராக பெருமை சேர்த்து விட்டார். என்னுடன் ஒரு படம் மட்டுமே பணியாற்றிய அவரிடம் இந்தப் படத்தில் நான் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன்.


ஆரம்பச்சுற்று

ஆரம்பச்சுற்று

பெண் இயக்குநர் என்ற வார்த்தையை உபயோகப்பதே ஒரு பாவம் என கருதுகிறேன். இயக்குநர்களில் ஆண், பெண் என என்ன இருக்கிறது? சொல்லப்போனால் இறுதிச்சுற்று படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்குமே இது தான் ஆரம்பச்சுற்று. அடுத்ததாக என்ன பண்ணப் போகிறார்கள்? என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது" என்று ஒட்டுமொத்த படம் மற்றும் படக்குழுவினர் குறித்த தனது கருத்துக்களை பாலா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


English summary
"I Don't know Anything about Boxing but Irudhi Suttru film has Affected me Greatly" Director Bala says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil