Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூர்யாவுக்குள் இருந்த ரோலக்ஸை கண்டுபிடித்தவர்..விக்ரமுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த இயக்குநர் பாலா
சென்னை: நடிகர்கள் சியான் விக்ரம், சூர்யா திரை வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. இன்று அவரது பிறந்தநாள்.
Recommended Video
தமிழ் திரையுலகில் எத்தனையோ யதார்த்தமான இயக்குநர்கள் வந்து முத்திரைப்பதித்துள்ளனர். அதில் முக்கியமானவர் இயக்குநர் பாலா.
இன்றைய வெற்றி மாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோருக்கு முன்னோடியாக யதார்த்த படங்களை இயக்கியவர் பாலா எனலாம்.
ஆசை
படத்தில்
நடிக்க
பயந்த
இளைஞர்
ஆஸ்கர்
வந்த
வேகம்..25
ஆண்டுகளில்
நடிகர்
சூர்யா
கண்ட
அசுர
வளர்ச்சி

இயக்குநர்கள் பலவிதம்..பாலா தனி ரகம்
தமிழ் திரையுலகில் திரைப்படங்களை பொழுதுபோக்குக்காக எடுப்பவர்கள், காதல் காவியமாக எடுப்பவர்கள், குணச்சித்ர படமாக எடுப்பவர்கள், பிரம்மாண்டமாகவே எடுப்பவர்கள், திரைக்கதைக்காகவே பேசும்படி எடுப்பவர்கள் என பல இயக்குநர்கள் உள்ளனர். சமுதாய அக்கறையுடன் படங்களை அணுகியவர்கள் பலர் உள்ளனர். வாழ்க்கை நிலையில் மாற்றமில்லாமல் யதார்த்தமாக உள்ளது உள்ளபடி எடுத்து பெயர் வாங்கும் இயக்குநர்களும் உள்ளனர். அதில் முக்கியமானவர் பாலா.

கிரைம் வன்முறை படங்களின் ஆதிக்கம் தலைதூக்கும் சினிமா
கிரைம், வன்முறை படங்களை விரும்புபவர்கள் அதிகம் உள்ளனர். தற்போது பிரம்மாண்டம் என்கிற பெயரில் வன்முறையைத்தூண்டும், காட்சிப்படுத்தும் படங்கள் அதிகம் வருகின்றன. வசூல் ரீதியாக இப்படங்கள் வெற்றிப்பெறுவதால் அனைவரும் அதை நோக்கி நகரும் நிலை ஏற்படுகிறது. வன்முறை படங்களின் முடிவில் வன்முறை தீர்வாகாது என்பதுபோல் அல்லாமல் சமூக விரோதி, வன்முறையை கையில் எடுப்பவர்களே ஹீரோக்களாக சித்தரிக்கப்படுகின்றனர். பாலா படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகம் இருக்கும், ஆனால் ஹீரோவே கடைசியில் கொல்லப்படுவார்.

பாலச்சந்தர், பாரதிராஜா வரிசையில் பாலா
வன்முறைக்காட்சிகளையும், கிராமத்தி யதார்த்த காட்சிகளையும் இயல்பாக தன் படத்தில் அதிகம் வைத்திருப்பார் பாலா. இது அவரது பலம், பலவீனம் என இரண்டையும் சொல்லலாம். சில படங்கள் யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் அதில் ஒரு படம் தான் பரதேசி. பாலச்சந்தர், பாரதிராஜா கைப்பட்டால் களிமண் கூட கலைஞனாவான் என்பார்கள். அந்த வரிசையில் பாலாவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

சூர்யாவின் திரையுலக பயணத்தை மாற்றியமைத்த பாலா
நீயெல்லாம் நடிச்சு ஏன் எங்கள் உசுர வாங்குற என என் கண்முன்னால் ஒரு ரசிகர் சூர்யாவை பார்த்து கேட்டார் என தமிழ் திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிகர் என பேரெடுத்த சிவகுமார் ஒருவிழாவில் வருத்தமுடன் குறிப்பிட்டார். காரணம் சாக்லெட் பாயாக வலம் வந்த சூர்யாவால் சோபிக்க முடியவில்லை. அந்த நேரம் தான் சூர்யாவின் திரை வாழ்க்கையை புரட்டிப்போடும் ஒரு படம் அமைந்தது. இன்று ரோலக்ஸ் என தூக்கி வைத்து கொண்டாடப்படும் சூர்யாவின் நடிப்புக்கு விதை போடப்பட்டது, அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது 'நந்தா' என்கிற அந்தப்படம் தான். அதன் இயக்குநர் பாலா.

சூர்யாவுக்குள் இருந்த ரோலக்ஸை கண்டுபிடித்த பாலா
சூர்யாவுக்குள் உள்ள ரோலக்ஸை வெளிகொண்டு வந்தவர் பாலா. சூர்யா சாக்லெட் பாயாக திரையுலகில் இருந்த நேரத்தில் பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்தது அவரது திரை வாழ்க்கையை திருப்பிப் போட்டது. நந்தா படத்தில் அவரது இயல்பான ஆக்ரோஷமான நடிப்பு சூர்யா சாக்லேட் பாய் அல்ல நல்ல இயக்குநரிடம் சிக்கினால் இன்னும் அதிகம் வெளிப்படுத்துவார் என நிரூபித்தது. அதன் பின்னர் பிதாமகன் திரைப்படம் சூர்யாவுக்கு மேலும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. பாலாவிடம் கற்ற குருகுல கல்வி சூர்யாவை பல வேடங்களை அனாயசியமாக நடிக்கவைத்து ரோலக்ஸில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

விக்ரமின் இரண்டாவது இன்னிங்க்ஸ் பாலாவால் தொடங்கியது
இதேபோல் விக்ரமுக்கும் சரியான பேசுகிற வகையில் படங்கள் அமையாமல் இருந்த நேரம் 1999 ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்த சேது படத்திற்கு பின் விக்ரமின் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியது. அது இன்றுவரை தொடர்ந்து ஓடுகிறது. விக்ரமிற்கு அதன் பின்னர் பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படம் தேசிய விருதைப்பெற்றுத்தந்தது. இந்தப்படத்தில் விக்ரமிடமிருந்து வித்தியாசமான நடிப்பை வெளிக்கொணர்ந்தார் பாலா.

பாலு மகேந்திரா பாசறையின் மாணவர் பாலா
பாலுமகேந்திராவின் பாசறையிலிருந்து வந்த பாலா வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்குவதில் பெயர் போனவர், அவரது நான் கடவுள் படம் அகோரியாக ஆர்யாவை ஹீரோவாக நடிக்கவைத்து மிரட்டியிருப்பார். இந்தப்படம் பாலாவுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசியவிருதைப்பெற்றுத்தந்தது. அவன் இவன் படத்தில் விஷாலை அவர் இதுவரை நடிக்காத ஒருவித ரோலில் நடிக்க வைத்திருப்பார். பரதேசிப்படத்தில் இளம் கதாநாயகன் முரளியின் மகனை மிகச்சிறப்பாக நடிக்க வைத்திருப்பார்.

என்னை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர் பாலா- சூர்யா
பாலாவைப்பற்றி வாடிவாசல் படம் ஆரம்ப அறிவிப்பின்போது குறிப்பிட்டுள்ள சூர்யா, என்னைவிட என் மீது நம்பிக்கை வைத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆழமான வார்த்தை அது. ட்விட்டரில் அவரது பதிவு வருமாறு, " என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்...ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்...அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்" என பதிவிட்டிருந்தார்.

பாலாவுக்கு இன்று 56 வது பிறந்த நாள்
சூர்யாவின் வார்த்தைகள் நிரூபிக்கப்பட்ட ஒன்று. பாலாவால் பட்டைத்தீட்டப்பட்ட அவர் சொல்வதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் பல இளம் கலைஞர்கள் பாலாவால் பட்டைத்தீட்டப்படலாம். இன்று அவரது 56 வது பிறந்த நாள். பாலா கைவண்ணத்தில் தமிழ் திரையுலகின் பெருமைப்போற்றும் படங்கள் இன்னும் அதிகம் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். அது நிச்சயம் நிறைவேறும் என நாமும் நம்புவோமாக.