twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தப்பையன் எதிர்காலத்தில் நல்லா வருவான்..எஸ்பிபியிடம் ஆருடம் சொன்ன பாலச்சந்தர்..யாரைச் சொன்னார்?

    |

    சென்னை: இயக்குநர் பாலச்சந்தர் ஒருமுறை பாடகர் எஸ்பிபியிடம் ஒரு இளைஞரைக்காட்டி வருங்காலத்தில் பெரிய ஆளாக வருவான் பார்த்து வச்சுக்கன்னு சொன்னாராம், அது பின்னர் பலித்தது.

    இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் எதிர்கால சினிமாவின் ஆளுமைகள் இவர்கள் தான் என இருவரை தேர்வு செய்தார். அவர்களும் அதை சரி என நிரூபித்தார்கள்.

    இன்று பாலச்சந்தரின் பிறந்த நாள். திரையுலகில் இயக்குநராக மட்டுமல்ல 3 தலைமுறையாக மற்றவர்களை உயர்த்திவிட்டதிலும் அவரது பங்கு உண்டு.

     அச்சு அசல் கமலை வரைந்த ரசிகை.. விக்ரம் படத்திற்கு பிறகு இப்படி ஒரு பாசிட்டிவ் வைப்ரஷன்! அச்சு அசல் கமலை வரைந்த ரசிகை.. விக்ரம் படத்திற்கு பிறகு இப்படி ஒரு பாசிட்டிவ் வைப்ரஷன்!

    எம்ஜிஆர், சிவாஜிக்கு பின் இருவரை உருவாக்கிய ஆசான் பாலச்சந்தர்

    எம்ஜிஆர், சிவாஜிக்கு பின் இருவரை உருவாக்கிய ஆசான் பாலச்சந்தர்

    இன்று பிறந்த நாள் காணும் மறைந்த இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி வலுவாக இருந்த காலத்தில் தனி ஆவர்த்தனமாக எளிய திரைக்கதைகள், எளிய நடிகர்களை வைத்து படம் இயக்கி தமிழ் மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர். எதிர் நீச்சல் மாது, பட்டு மாமி, மேஜர் சந்திரகாந்த் மேஜர் ரோல், பாம விஜயம், பூவா தலையா என பல படங்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களை கட்டிப்போட்ட படங்கள். எம்ஜிஆர், சிவாஜிக்கு பின்னர் எம்ஜிஆர், சிவாஜியை உருவாக்கியவர் பாலச்சந்தர் தான் மற்ற இயக்குநர்களுக்கு அந்த வேலையை அவர் தரவில்லை.

    கமலுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளைக் கொடுத்த இயக்குநர்

    கமலுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளைக் கொடுத்த இயக்குநர்

    தான் அறிமுகப்படுத்திய ரஜினியைப்போலவே சில நடிகர்களுக்கு பலமுறை வாய்ப்பை திரும்ப திரும்ப வழங்கி தூக்கி விட்டுள்ளார் பாலச்சந்தர். அதில் முதன்மையானவர் கமல்ஹாசன். விடலைப்பருவமாக இரண்டும் கெட்டானாக கமல் இருந்தக் காலக்கட்டத்தில் அரங்கேற்றம் படத்தில் நடிக்க வைத்தார். பின்னர் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்திலும் இரண்டாவது கதாநாயகன் ரோல், அபூர்வ ராகங்கள், அவர்கள், மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், வறுமையின் நிறம் சிகப்பு, மரோசரித்ரா, ஏக்துஜே கேலியே, உன்னால் முடியும் தம்பி, புன்னகை மன்னன் என வரிசையாக படங்கள் கொடுத்தார்.

    சிவாஜிராவ் ரஜினிகாந்தாக பெயர் மாற்றமும் இவரால்தான்

    சிவாஜிராவ் ரஜினிகாந்தாக பெயர் மாற்றமும் இவரால்தான்

    ஆரம்பத்தில் தம்பி கேரக்டர், இரண்டாவது ஹீரோ, ஹீரோ என படிப்படியாக கமல் வளர்வதற்கு பாலச்சந்தர் முழுக்காரணம் எனலாம். இதை கமல்ஹாசனும் பலமுறை குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ரஜினிகாந்த் எனும் நடிகரை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தி அடுத்தடுத்த வாய்ப்புகள் கொடுத்து தூக்கிவிட்டதால் தான் அவரை எப்போதும் ரஜினிகாந்த் மறந்ததில்லை. சிவாஜிராவை குண்டுராவை ஒரு ஹோலி பண்டிகை நேரத்தில் ரஜினிகாந்தாக பெயர் மாற்றம் செய்ததும் பாலச்சந்தர்தான்.

    எஸ்பிபியிடம் ரஜினி பற்றி சொன்ன பாலச்சந்தர்

    எஸ்பிபியிடம் ரஜினி பற்றி சொன்ன பாலச்சந்தர்

    இவர்களில் மிகப்பெரிய அறிமுகம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். ஒரு முறை செட்டில் எஸ்.பி.பாலசுப்ரமணியனுடன் பேசிக்கொண்டிருந்தபோது துருதுருவென இருந்த இளைஞரைக் காட்டி "இவரை நன்றாக பார்த்து வைத்துக்கொள் பிற்காலத்தில் பெரிய ஆளாக வருவார் என்றாராம்". அந்த இளைஞர்தான் பிற்காலத்தில் சூப்பர் ஸ்டாராகி இன்றுவரை உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த். இதை எஸ்பிபி பலமுறை பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

    3 தலைமுறை கண்ட இயக்குநர்

    3 தலைமுறை கண்ட இயக்குநர்

    இப்படி இரண்டு பெரிய நடிகர்களுக்கு மட்டுமல்ல, சுந்தர்ராஜன் மேஜர் சுந்தர்ராஜனாக மாறியதும் பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் படத்தில் வைக்கப்பட்ட கேரக்டரால் தான். பாலச்சந்தர் மூன்று தலைமுறைகாலத்திற்கு படம் எடுத்தவர். மக்களின் நாடித்துடிப்பு அறிந்தவர். அதனால் தான் அவரால் அனைத்து காலத்திலும் வெற்றிப்பெற முடிந்தது.

    English summary
    Director Balachander has created many personalities including Rajini Kamal. Balachander's prediction about Rajini that day may be a prophetic vision.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X